• Apr 26 2024

ஷாருக்கானை நேர்ல பார்த்தா உயிரோடு எரிச்சி கொன்றுவேன் - அயோத்தி துறவி ஆவேசம்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

அயோத்தியை சேர்ந்த ஜகத்குரு பரமஹன்ஸ் ஆச்சார்யா என்கிற துறவி ஒருவர், நடிகர் ஷாருக்கானை நேரில் பார்த்தால் உயிரோடு எரித்து கொன்றுவிடுவேன் என பேசியுள்ளது  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள திரைப்படம் பதான். மேலும் இப்படம் வருகிற ஜனவரி மாத இறுதியில் ரிலீசாக உள்ளது. இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். அதிரடி ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட இப்படத்தில் பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம் வில்லனாக நடித்திருக்கிறார். 

மேலும் இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு மாதமே எஞ்சியுள்ள நிலையில், இப்படம் குறித்த அப்டேட்டுகளும் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளன.அந்த வகையில், பதான் படத்தில் இருந்து பெஷாரம் ரங் என்கிற வீடியோ பாடல் கடந்த வாரம் வெளியிடப்பட்டது.அத்தோடு  தீபிகா படுகோனேவில் டூபீஸ் கவர்ச்சி காட்சிகள் நிறைந்த இந்த பாடல் தான் தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளது. இதில் நடிகை தீபிகா படுகோனே காவி நிறத்தில் பிகினி உடை அணிந்து நடனம் ஆடியது தான் இந்த பிரச்சனைக்கு காரணம்.

இந்துக்களின் புனித நிறமான காவியை கொச்சைப்படுத்திவிட்டதாகவும், இதன்மூலம் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தி விட்டதாகவும் ஷாருக்கான் மீதும், தீபிகா படுகோனே மீதும் அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்து வருகின்றனர். அத்தோடு அந்த பாடல் காட்சியை நீக்காவிட்டால் அப்படத்திற்கு தடைவிதிக்க வேண்டுமென்றும் பல்வேறு இந்து அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றனர்.

இவ்வாறுஇருக்கையில், அயோத்தியை சேர்ந்த ஜகத்குரு பரமஹன்ஸ் ஆச்சார்யா என்கிற துறவி ஒருவர், பதான் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, நடிகர் ஷாருக்கானை நேரில் பார்த்தால் உயிரோடு எரித்து கொன்றுவிடுவேன் என ஆவேசமாக பேசி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காவி நிறத்தை கலங்கப்படுத்தி உள்ள இதுபோன்ற படங்களை புறக்கணிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.


ஷாருக்கான் தொடர்ந்து சனாதன தர்மத்தை கலங்கப்படுத்தி அதன்மூலம் பணம் சம்பாதித்து வருவதாகவும், சனாதன தர்மத்தை கலங்கப்படுத்துபவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என அவர் பேசியுள்ளார். அத்தோடு பதான் திரைப்படத்தை ஏதேனும் திரையரங்குகளில் திரையிட்டால் அந்த திரையரங்கை கொளுத்துவோம் எனவும் அவர் எச்சரித்துள்ளார். 


Advertisement

Advertisement

Advertisement