தமிழில் வெளியான உழவன் மகன் என்ற படத்தின் மூலம் முதன் முதலில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் ரம்பா. அதன் பின்பு உள்ளத்தை அள்ளித்தா என்ற படத்தில் நடித்தார். சுந்தர் சியை வெற்றி படமாக்கிய படமும் உள்ளத்தை அளித்ததா தான்.
இதை அடுத்து நிறைய படங்களில் நடித்த ரம்பா, தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என்று சக்கை போடு போட்டார். அவருடைய சிரிப்பும் தொடையழகும் பின்புற அழகும் மிக அழகாக இருந்ததால் ரசிகர்கள் அவரை கனவுக்கு கன்னியாக ஏற்றுக் கொண்டார்கள்.
அவர் சொந்த செலவில் தயாரித்த படத்தின் பெயர் 'த்ரீ ரோசஸ்' இந்த படத்துல ரம்பா, ஜோதிகா, லைலா மூவரும் கதாநாயகிகள். கவர்ச்சியும் காட்டி நடித்தார்கள். ஆனால் எடுபடவில்லை. அதன் பிறகு அந்த சோகத்தில் இருந்து மீள 'குயிக் கன் முருகன்' என்ற படத்தில் நடித்தார். அது சூப்பர் ஹிட்டானது.
அண்மையில் ரம்பா அவருடைய கணவருக்கு சொந்தமான மேஜிக் ஹோம் நிறுவனத்தில் இரண்டாவது கிளையை திறந்து வைத்தார். அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த ரம்பா கூறுகையில்,
மேஜிக் ஹோம்மின் முதல் கிளை சென்னையில் செயல்பட்டு வருகின்றது. அதன் இரண்டாவது கிளையை கோவையில் திறந்து வைப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. என்னுடைய சொந்த ஊரான ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் அடுத்த கிளையை திறக்க உள்ளோம். எதிர்வரும் ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 30க்கும் மேற்பட்ட கிளைகளை திறக்க திட்டமிட்டுள்ளோம்.
2010க்கு பிறகு நான் சினிமாவில் நடிக்கவில்லை. ஆரம்ப காலத்தில் சினிமாவில் நடித்தது மிகப் பெரிய வெற்றி கிடைத்தது. தற்போது தமிழ் சினிமாவில் நல்ல கதைகள் இல்லாததால் நடிகைகள் பிற மொழிகளில் நடிக்க செல்கின்றார்கள். பாகுபலி படத்திற்கு பிறகு எந்த விதமான கதையையும் எதிர்பார்க்க கூடிய அளவுக்கு இல்லை.
தற்போது இருக்கக்கூடிய கதைகளில் நடித்தால் எனது பிள்ளைகள் கூட விரும்பி திரைப்படத்தை பார்க்க மாட்டார்கள் பெண்களுக்கான நல்ல கதைகள் தமிழ் சினிமாவில் அமைவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.
Listen News!