• Apr 26 2024

திருடி தான் கதைகள் எழுதுறேன்… ராஜமெளலியின் தந்தை கூறிய பதிலால் ஷாக்கான ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

 தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநரான ராஜமெளலியின் பெரிய பலமே அவரது தந்தை விஜயேந்திர பிரசாத் தான்.ராஜமெளலி இயக்கிய படங்கள் உட்பட பல இயக்குநர்களுக்கு கதை எழுதியுள்ளார் விஜயேந்திர பிரசாத்.இவ்வாறுஇருக்கையில், தான் கதை எழுவது குறித்து விஜயேந்திர பிரசாத் கூறியுள்ள கருத்து வைரலாகி வருகிறது.


தெலுங்கு திரையுலகில் இருந்து பான் இந்தியா மார்க்கெட்டை தொடங்கி வைத்தது ராஜமெளலியின் பாகுபலி திரைப்படம் தான். அத்தோடு பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் சூப்பர் ஹிட் அடித்த நிலையில், அதனைத் தொடர்ந்து இந்தாண்டு வெளியான 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படமும் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. மேலும் இந்தப் படங்கள் உட்பட ராஜமெளலியின் மஹதீரா, சிறுத்தை உட்பட பல படங்களுக்கும் கதை எழுதியது ராஜமெளலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் தான். தெலுங்கு மட்டும் இல்லாமல், இந்தியில் சல்மான் கான் நடிப்பில் மிகப் பெரிய வரவேற்பை பெற்ற 'பஜ்ரங்கி பைஜான்' படத்துக்கும் விஜயேந்திர பிரசாத் தான் என்பது குறிப்பிடத்தக்கது.


அத்தோடு கடந்த மார்ச் மாதம் வெளியான 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் தரமான சாதனையை படைத்தது. பாக்ஸ் ஆபிஸில் 1200 கோடிக்கும் மேல் வசூலித்த இந்தப் படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய்தேவ் கன் நடித்திருந்தனர். 


இந்தப் படம் ஆஸ்கர் போட்டியிலும் களமிறங்கியுள்ள நிலையில், இதன் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என ராஜமெளலி தெரிவித்துள்ளார்.எனினும் அதற்கான கதையையும் ராஜமெளலியின் தந்தை விஜேயந்திர பிரசாத் தான் எழுதி வருகின்றார்.


ஆர்ஆர்ஆர் இரண்டாம் பாகத்தின் கதையையும் விஜேயந்திர பிரசாத் எழுதி வருவது படம் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இவ்வாறுஇருக்கையில், கோவாவில் நடந்த 53வது சர்வதேச திரைப்பட விழாவில் விஜயேந்திர பிரசாத் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் "நான் கதைகளை எழுதுவதில்லை. திருடுகிறேன். அத்தோடு நம் எல்லோரையும் சுற்றியும் ஏராளமான கதைகள் உள்ளன.அதாவது  மகாபாரதம், ராமாயணம் போல அனைவரின் நிஜ வாழ்க்கையிலும் கதைகள் கொட்டிக் கிடக்கின்றன. எனக்கு அங்கிருந்து தான் கதைகள் கிடைக்கின்றன" எனக் தெரிவித்துள்ளார்.


விஜயேந்திர பிரசாத்தின் இந்த கருத்தை திரையுலகைச் சேர்ந்தவர்களும் ரசிகர்களும் வரவேற்றுள்ளனர். தமிழில் மணிரத்னம் இயக்கும் பல படங்களும் ராமாயணம், மஹாபாரதம் கதைகளை பின்னணியாகக் கொண்டு இருக்கும். எனினும் அதேபோல், மேலும் சில இயக்குநர்களும் தங்களை சுற்றி நடக்கும் கதைகளை தான் படமாக எடுக்கின்றனர். ஆனால், பெரும்பாலான இயக்குநர்களுக்கு கதை தேர்வு குறித்து பெரிய அனுபவம் இல்லை என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது. இந்நிலையில், விஜேயந்திர பிரசாத் கதை எழுதுவது குறித்து பகிர்ந்துள்ள கருத்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement