• Sep 20 2024

'விக்ரம் படத்தில் மிகவும் மோசமான கதாப்பாத்திரத்தில் தான் நடித்துள்ளேன்'- நடிகர் விஜய்சேதுபதி

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் முக்கிய நடிகரான கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் விக்ரம். இப்படத்தினை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இதனால் இப்படத்தின் எதிர்பார்ப்பானது ரசிகர்களிடையே அதிகரித்துக் காணப்படுகின்றது.

மேலும் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் இருவரும் சேர்ந்து நடித்திருக்கிறார்கள்.அவர்கள் இருவரின் கதாபாத்திரங்கள் எப்படி இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

இந்நிலையில் விஜய் சேதுபதி சமீபத்தில் இப்படத்தில் அவரின் கதாபாத்திரம் குறித்து முதல்முறையாக பேசியுள்ளார்.
அதில் "இதுபோன்று மனிதனின் மற்றொரு இருண்ட பக்கத்தை காட்டுவது எனக்கு பிடித்தமான ஒன்று. நான் வில்லனாக நடிப்பதை திரையில் பார்ப்பதன் மூலம் என் நிஜ வாழ்க்கையில் வாழ முடியாத ஒரு வாழ்க்கையை வாழ்வது போன்று உணர்கிறேன்" என்று கூறியுள்ளார்.

திரையில் காண்பிக்கப்படும் எந்த வில்லன்களின் நடிப்பும் ஒரே மாதிரியாக இருக்காது. மாஸ்டர் மற்றும் உபென்னா படத்தில் எனது கதாபாத்திரம் ஒரே மாதிரியாக இருந்திருக்காது. அதேபோல தான் விக்ரம் படத்திலும் என்னுடைய நடிப்பும் இருக்கும், ஒரு மனிதனின் மிகவும் மோசமான பக்கத்தை தெளிவாக காட்டியிருப்பேன்" என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement