• Apr 05 2025

நடிகர் விஜயைப் போல எனக்கு பாதுகாப்பு ஒன்னும் தேவையில்லை..! சீமான் ஓபன்டாக்!

subiththira / 10 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது அரசியலிற்குள் அதிகாரப்பூர்வமாக காலடி வைத்து இருக்கின்றார். இவரது அரசியல் பயணத்தை முன்னிட்டு, சமூக ஊடகங்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் விஜய் தொடர்பான விவாதங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில்,சீமான் கூறிய கருத்துக்கள் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் நடிகர் விஜய்க்கு அரசு சார்பாக 'Y' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக, Y பிரிவு பாதுகாப்பு என்பது, முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு முறையாகும். அந்தவகையில் விஜய்க்கு எதிர்ப்பாக ஏற்படக்கூடிய சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு இந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்த நிலையில் சீமான் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, விஜய்க்கு வழங்கப்பட்ட Y பிரிவு பாதுகாப்பு குறித்து தன் கருத்தைத் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, "நடிகர் விஜய் தற்போது அரசியல் மேடையில் புதிய முயற்சி மேற்கொண்டு வருகின்றார். அவருக்கு பாதுகாப்பு தேவைப்பட்டதால், அரசு Y பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. இது அவருக்கான உரிமை. ஆனால் என்னுடைய நிலைமையைப் பார்த்தால், எனக்கு எந்த பாதுகாப்பும் தேவையில்லை. என் மக்களே எனது பாதுகாப்பு. அவர்கள் இருக்கின்ற வரை எனக்கு எதுவும் நடக்காது!" என்று மிகுந்த நம்பிக்கையோடும் உணர்ச்சியோடும் தெரிவித்துள்ளார்.

சீமானின் இந்த கூற்று சமூக ஊடகங்களில் பெரிய அளவில் வைரலாகியுள்ளது. பலர் அவரது நம்பிக்கையைப் பாராட்டி வருகின்றார்கள். சிலர், விஜய்க்கு பாதுகாப்பு வழங்கப்பட்டதையொட்டி அவர் எதிர்கால அரசியல் பயணத்தின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டிய கட்டாய நிலை உருவாகியுள்ளது எனக் கூறியுள்ளனர்.

நடிகர் விஜயின் அரசியல் பயணத்தின் ஆரம்பமே இவ்வளவு பரபரப்பாக இருப்பது, அவரது எதிர்கால அரசியல் பங்களிப்பிற்கான எதிர்பார்ப்புக்களை அதிகரித்திருக்கின்றது . அத்துடன் சீமான் போன்றவர்களின்  கருத்துக்கள், அரசியல் சூழ்நிலையை மேலும் சுவாரஸ்யமாக மாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement