• Apr 27 2024

'நான் அந்த நடிகருடன் நடிக்கவில்லை'-ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மாளவிகா மோகனன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் தான் மாளவிகா மோகனன்.இதனைத் தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.

இது தவிர தனுஷ் நடிப்பில் வெளியான மாறன் திரைப்படத்திலும் நடித்திருந்தார். சமூக வலைத்தளங்களில் ஆர்வமாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்களை வெளியிட்டு வருவார். அத்தோடு ரசிகர்களின் கேள்விக்கும் பதில் அளித்து வருவார்.

தற்போது தெலுங்கில் முன்னணி ஹீரோவுடன் புதிய படத்தில் இணைந்து நடிக்கவுள்ளார். இந்தப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பாலிவுட்டில் சல்மான் கான் ஜோடியாக மாளவிகா நடிக்கவுள்ளதாக இணையத்தில் செய்திகள் பரவியது. இது குறித்த செய்தியை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, இது முற்றிலும் பொய்யான செய்தி. இதை ஏன் இங்கே போடுகிறேன் என்றால், பலரும் எனக்கு போன் செய்து தொல்லை செய்கிறார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இப்படி பதிவிட்டு இருக்கிறேன் என விளக்கம் கொடுத்துள்ளார்.

பொதுவாக இது போல் பரவும் செய்திகளுக்கு நடிகர், நடிகைகள் விளக்கம் கொடுப்பதில்லை. ஆனால் மாளவிகா மோகனன் நேரம் எடுத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். மேலும் எதிர்காலத்தில் சல்மான் கான் படத்தில் நிச்சயம் நடிப்பீர்கள் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement