• Dec 10 2022

பிக்பாஸில் இந்த வாரம் வெளியேறப்போவது இவரா..? நம்பவே முடியல... அப்போ இறுதியில் உள்ள அந்த 3பேர் யாரு...!

Listen News!
Prema / 1 month ago
image
Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசன் ஆனது ஆரம்பமாகி கலகலப்பிற்கும், விறுவிறுப்பிற்கும் கொஞ்சமும் பஞ்சமில்லாத வகையில் 4ஆவது வாரத்தை வெற்றி கரமாக நிறைவு செய்துள்ளது. இதுவரை எந்த சீசனிலும் இல்லாத வகையில் 21 போட்டியாளர்களுடன் அட்டகாசமாக தொடங்கிய இந்நிகழ்ச்சியில் தற்போது 17 போட்டியாளர்களே மீதமாக உள்ளனர். 


அதாவது இரண்டாவது வாரம் ஜிபி முத்து, சாந்தி ஆகியோர் வெளியேறிச் சென்றனர். அதேபோல் 3ஆவது வாரத்தில் அசல் கோளார் வெளியேற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் ஷெரினா குறைந்து வாக்குகள் பெற்றதன் மூலம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் இந்த வாரம் எவ்விஷனுக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ள நபர்கள் குறித்து முதலாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் விக்ரமன், அசீம், ஆயீஷா, மகேஸ்வரி, ராம், தனலட்சுமி உள்ளிட்டோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

இதில் ராம், கதிரவன், நிவாஷினி ஆகியோரில் ஒருவரே வெளியேற்றப்படுவார் எனப் பலரும் கூறி வருகின்றனர். அதற்கு காரணம் எஞ்சி உள்ள 17 பேரில் இவர்கள் மூவருமே குறைந்த அக்டிவிட்டீஸ் உடையவர்களாகக் காணப்படுகின்றனர். 

அந்தவகையில் மக்களிடம் இருந்து குறைந்த வாக்குகள் பெற்றவர்கள் வரிசையில் ராம் முதலிடத்திலும், கதிரவன் இரண்டாவது இடத்திலும், நிவாஷினி மூன்றாவது இடத்திலும் உள்ளனர். எனவே மிகக்குறைந்த வாக்குகளைக் கொண்டிருப்பதால் ராம் வெளியேற அதிக வாய்ப்புகள் உள்ளதாக ரசிகர்கள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது.