• Apr 24 2024

காட்டுக்குள் பிக்பாஸ் தாமரை போட்ட ஆட்டம் -தீயாய் பரவும் வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

 பிக்பாஸ் தாமரை செல்வி சிம்பு பட பாடலுக்கு கலக்கல் ஆட்டம் போட்டுள்ள வீடியோ தற்போது ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது

உலகெங்கும் ரசிகர்களைக் கொண்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தாமரை செல்வி. மேடை நாடக கலைஞரான தாமரை செல்வி பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பாக விளையாடினார்.இதன்மூலம் தமிழக மக்களுக்கு பரீட்சயமான தாமரை செல்வி தொடர்ந்து விஜய் டிவி  பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.


தாமரை செல்விக்கு சினிமா பட வாய்ப்புகளும் அடுத்தடுத்து  குவிந்து வருகிறது. படப்பிடிப்பு தளங்களில் எடுத்த புகைப்படங்களை  வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார் தாமரை செல்வி. அடிக்கடி மாடர்ன் உடையில் போட்டோ ஷூட்டுக்களை நடத்தி அவற்றையும் தனது சமூக வலைதள பக்கத்தில்  பகிர்ந்து வருகிறார்.

மேலும் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், அருமையாக உள்ளது இதுபோல் நிறைய வீடியோக்களை ஷேர் செய்யுங்கள் என தெரிவித்து வருகின்றனர்.. இன்னும் சிலர் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் சேர்ந்தவர்தான் தாமரை செல்வி என்றும் பாராட்டி தீர்த்து வருகின்றனர்.

இந்நிலையில்  தாமரை செல்வி ஷேர் செய்துள்ள வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை பாராட்டி வருகின்றனர். அதாவது சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு படத்தில் இடம் பெற்ற, மல்லிப்பூ பாடலுக்கு கலக்கலாக நடனமாடியுள்ளார் தாமரை செல்வி.



Advertisement

Advertisement

Advertisement