• Jan 18 2025

அம்மா இறந்த பிறகு நான் அனாதையாகிட்டேன்... குக் வித் கோமாளி பவித்ரா எமோஷ்னல் பேட்டி...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியின் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி சமையலை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டாலும் காமெடி ப்ளஸ் சமையல் என்ற புதிய கான்செப்டால் மக்களிடம் அதிகம் ரீச் ஆனது. இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டவர் தான் பவித்ரா.


இவர் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா எனும் நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமானார். அதன்பின் மாடலிங் துறையில் சில காலங்கள் பணியாற்றிய இவர் மலையாள படம், உல்லாசம் போன்ற படங்களில் சிறிய ரோலில் நடித்திருந்தார்.


இப்போது குறும்படங்கள், போட்டோ ஷுட்கள் என்று பிஸியாக இருக்கிறார். சமீபத்தில் நடிகர் சதீஷ் ஹீரோவாக நடித்த நாய் சேகர் படத்தில் நாயகியாக நடித்தும் அசத்தினார், ஆனால் படம் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. நடிகை பவித்ரா அண்மையில் ஒரு எமோஷ்னலான பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர், கடந்த ஆண்டு மே மாதம் உடல்நலக் குறைவால் அம்மா இறந்துவிட்டார்கள், அப்போது நான் காசியில் இருந்தேன்.


அந்த கடைசி நேரத்தில் கூட நான் அம்மாவுடன் இல்லை, அவரை கோயம்புத்தூர் கொண்டு செல்வதற்கு எனது நண்பர்கள் தான் உதவி செய்தார்கள். இப்போது எனக்கு யாருமே இல்லை, எனக்காக தான் ஓடிக் கொண்டிருக்கிறேன். என் அம்மாவிற்கு நான் நடிப்பதை விட கவிதை, பாடல் எழுதுவது ரொம்ப பிடிக்கும், இதனாலேயே பாடல் மீது எனக்கு அதிக ஈர்ப்பு இருந்தது. இதனால், சின்ன சின்ன கவிதைகள் எழுதி இருக்கிறேன் என்று கூறினார் பவித்ரா.  

Advertisement

Advertisement