விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது சுவாரஸ்யமாக ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த சீரியலில் ரோகினியின் கபட நாடகங்கள் ஒவ்வொன்றாக அவிழ்க்கப்படுவது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்குள் குறுகிய காலத்திற்கு உள்ளையே TRP ரேட்டிங்கில் முதல் இடத்தை பெற்ற சீரியலாக சிறகடிக்க ஆசை சீரியல் காணப்படுகின்றது. இந்த சீரியல் இல்லத்தரசிகள் மட்டுமின்றி இளம்வட்ட ரசிகர்கள் வரை விரும்பிப் பார்க்கும் ஒரு தொடராகவும் உள்ளது.
d_i_a
சிறகடிக்க ஆசை சீரியல் இளம் ஜோடிகளுடன் சாதாரண குடும்பத்தில் நடக்கும் கதைகளத்தை மையமாக கொண்டு நகர்வதாக காணப்படுகின்றது. இந்த சீரியலின் முக்கிய கேரக்டராக முத்து, மீனா காணப்பட்ட போதும் இதில் நடிக்கும் மனோஜ் ரோகிணியின் கேரக்டர்கள் தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் உள்ளன.
அந்த வகையில் மனோஜ் - ரோகிணி இருவருமே பிறரை ஏமாற்றுவதிலும் தனது சுயநலத்தில் மட்டும் கவனம் செலுத்தும் கேரக்டராகவும் காணப்படுகின்றனர். அதிலும் ரோகிணி தனது கடந்த கால வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மறைத்து திருமணம் செய்துள்ளார்.
தற்போது இந்த சீரியலில் மனோஜ் ரோகிணிக்கு வந்த பேராசையால் முப்பது லட்சத்தை இழந்து காணப்படுகின்றார்கள். பிசினஸ் ரீதியிலும் மனோஜ் சரிவை சந்தித்துள்ளார். இதனால் அண்ணாமலையை ஷோரூமுக்கு ஓனராக முத்து நியமிக்கின்றார்.
இந்த நிலையில் சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் கேரக்டரில் நடிக்கும் ஸ்ரீதேவா இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் விஜயா ஓனர்ஷிப் மூலம் கிடைத்த ப்ரோபிட்டின் மூலமாக ஒரு இடத்தை வாங்கி மரங்களை நட்டதாக தெரிவித்த மனோஜ், அங்கிருந்த நெல்லி மரம் மீது நெல்லிக்காய்களை பறிக்கும் போது உண்மையான ஓனர் வந்து விடுகின்றார்.
இதனால் பதறி அடித்து மனோஜ் ஓடிய வீடியோவை நகைச்சுவையாக வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ..,
Listen News!