ஜாய் கிரிஸில்டாவை காதலித்து திருமணம் செய்த மாதம்பட்டி ரங்கராஜ், அவர் கர்ப்பமான பிறகு அவரை ஏமாற்றினார். இதனால் மாதம்பட்டி ரங்கராஜ் மீது திருமண மோசடி புகார் கொடுத்தார் ஜாய். தற்போது இது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், திருமண மோசடி புகாரில் சிக்கிய மாதம்பட்டி ரங்கராஜ் விதிகளை பின்பற்றாமல் முறைகேடாக டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் டெண்டர் பெற்றதாக அடுத்த புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பில் வழக்கறிஞர் ஒருவர் கூறுகையில், மாதம்பட்டி ரங்கராஜ் டெல்லியில் இருக்கக்கூடிய தமிழ்நாடு இல்லத்தில் உணவு நடத்துவதற்கு உரிமம் வாங்கியுள்ளார்.

டெண்டரில் உள்ள விதிகளை மீறி சட்ட விரோதமான முறையில் டெண்டர் எடுத்துள்ளார். 120 நபர்கள் அமர்ந்து சாப்பிடக்கூடிய உணவகம் நடத்திருக்க வேண்டும், 5 ஆண்டுகள் உணவகம் நடத்திருக்க வேண்டும், ஏற்கனவே ஐந்து வருடம் டெண்டர் எடுத்திருக்க வேண்டும் போன்ற விதிகளை எல்லாம் மீறி இவர் டெண்டர் எடுத்துள்ளார்.

இது தொடர்பில் புகார் அளித்தோம். அதற்கு விதிகளை மீறி அவருக்கு டெண்டர் வழங்கப்பட மாட்டாது என்று கூறினர். ஆனால் அதையும் மீறி இன்று அவர் தமிழ்நாட்டில் டெண்டர் எடுத்துள்ளார்.
மேலும் அங்கு கேட்டரிங் மேனேஜராக தமிழ்நாடு சுற்றுலா வாரியத்தின் மேனேஜர் தான் அந்த பதவியில் இருக்க வேண்டும். ஆனால் பாத்திரம் கழுவும் வேலைக்கு வந்த ஒருவர் இந்த பொறுப்பில் உள்ளார். தகுதியை மீறி அவர் இந்த பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
Listen News!