• Sep 20 2024

தொகுப்பாளினி அர்ச்சனாவின் வீடா இல்லை மாளிகையா-நடிகர் நடிகைகளையே மிஞ்சிய விடுவார் போல...வைரலாகும் புகைப்படங்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!


90களில் இருந்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து முன்னணி தொகுப்பாளர்களில் ஒருவராக திகழ்பவர் தான் அர்ச்சனா.


சன் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான காமெடி டைம் என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வந்தார் அர்ச்சனா .அந்த நிகழ்ச்சியில் பிரபல காமெடி நடிகர் சிட்டிபாபு உடன் இணைந்து தனது தொகுப்பாளர் பணியை தொடர்ந்து அர்ச்சனா, அதன் பின்னர் ஸ்வர்ணமால்யா விட்டுச்சென்ற ‘இளமை புதுமை’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி தனக்னெ ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டார்.




இதனைத் தொடர்ந்து தனது தொகுப்பாளினி பணியை செய்து வந்த அர்ச்சனா. கடந்த 2004 ஆம் ஆண்டு வினித் முத்துகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் .இதன் பின்னர் நீண்ட இடைவேளைக்கு பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ச ரி க ம ‘ ரியாலிட்டி ஷோவில் தொகுப்பாளினியாக களமிறங்கினார் அர்ச்சனா.



அர்ச்சனாவும் அவரது மகளும் சேர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சூப்பர் மாம்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதற்கு பெரும் ரசிகர் பட்டாளமே உருவாகியது.பின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் விஜய் தொலைக்காட்சிக்கு வந்தார். இப்போது இந்த தொலைக்காட்சியில் தான் பணியாற்றியும் வருகிறார். 



அதே போல கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டாக்டர்’ படத்திலும் அர்ச்சனா மற்றும் அவரது மகள் சாரா இருவரும் நடித்து இருந்தனர்.அர்ச்சனாவும் எல்லா சின்னத்திரை கலைஞர்களை போல ஒரு யூடியூப் பக்கம் வைத்துள்ளார். அதில் மிகவும் கலாட்டாவாக நிறைய விஷயங்களை பதிவிடும் அர்ச்சனா தனது வீட்டையும் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.




Advertisement

Advertisement