• Apr 26 2024

விஜய்யை சூழ்ந்த ரசிகர்கள் கூட்டம்... உடனே விஜய் செய்த செயல்... வைரலாகும் வீடியோ இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகத் திகழ்ந்து வருபவர் விஜய். சுமார் 65 இற்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள இவர் நடிப்பில் தற்போது 'வாரிசு' திரைப்படம் உருவாகி இருக்கின்றது. வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்துள்ளார். 


இதனைத் தொடர்ந்து அடுத்ததாக உருவாகவிருக்கும் திரைப்படம் 'தளபதி 67'. இப்படத்தின் வாயிலாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இரண்டாவது முறையாக விஜய் நடிக்கவிருக்கிறார். ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கும் இப்படம் குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்களுக்கு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே தான் இருக்கிறது.

இதே அளவு எதிர்பார்ப்பினைத் தான் வாரிசு படமும் ஏற்படுத்தி இருக்கின்றது. இத்திரைப்படம் ஆனது வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. மேலும் இப்படத்துடன் இணைந்து அஜித்தின் துணிவு திரைப்படமும் வெளியாக இருக்கிறது.


இதனால் இந்த இரண்டு திரைப்படங்கள் குறித்த விவாதம் இப்போதிருந்தே ரசிகர்கள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. அத்தோடு இப்படத்தின் 'ரஞ்சிதமே' பாடல் வெளியாகி பலத்த வரவேற்பையும் பெற்று வருகின்றது.

இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் உடைய கிளைமாக்ஸ் காட்சிகள் யாவும் தற்போது விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது. அங்கு எடுக்கப்பட்ட சில வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் பரவி வருகிறது. அதாவது விஜய்யை சந்திக்க ரசிகர்கள் பலரும் அவரின் கேரவான் அருகில் ஒன்று கூடியுள்ளனர்.


 அப்போது விஜய் ரசிகர்களை பார்த்து கையசைத்துவிட்டு அவர்களைத் தாண்டி செல்கின்றார். உடனே ரசிகர்கள் கூச்சலிட்டு கத்துகின்றனர். இதோ அந்த வீடியோ...!


Advertisement

Advertisement

Advertisement