• Apr 15 2026

சொன்னபடி செய்து காட்டிய விக்னேஷ் ராஜா! தனுஷை உருக வைத்த 'கர' திரைப்படம்..

shali / 2 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ள ‘கர’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்தப் படத்தை விக்னேஷ் ராஜா இயக்கியுள்ளார். 

இப்படத்தில் தனுஷுடன் இணைந்து முதல் முறையாக மமிதா பைஜூ நடித்துள்ளார். மேலும் சுராஜ் வெஞ்சரமூடு, கே.எஸ். ரவிக்குமார், ஜெயராம் மற்றும் கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.


வருகிற ஏப்ரல் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்த படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில், தனுஷ் இப்படத்தை பார்த்த பிறகு தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த கருத்து தற்போது வைரலாகியுள்ளது.

அவர் தனது பதிவில், “விக்னேஷ் ராஜா – யூ ஜீனியஸ், ‘கர’ திரைப்படத்திற்கு ரொம்ப நன்றி” என குறிப்பிட்டுள்ளார். தனுஷ் தானே நடித்த படத்தை இப்படியாக பாராட்டுவது ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை அளித்துள்ளது.

தனுஷின் இந்த கருத்து, ‘கர’ திரைப்படத்தின் முதல் விமர்சனமாகவே பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ரசிகர்கள், படம் கண்டிப்பாக வேற லெவலில் இருக்கும் என எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இப்படம் வெளியாகும் நாளை ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Advertisement

Advertisement