• Apr 26 2024

என்னது திரும்பவும் சண்டையா... அட அது பிக்பாஸ் வீட்டிலயா... வைரலாகும் காமெடி வீடியோ இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இது 5 சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில் தற்போது 6 ஆவது சீசன் ஆரம்பமாகி விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கின்றது.

இதில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஐவர் வெளியேறி விட்டனர். தற்போது 16 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர். இந்த வீட்டில் எது இல்லாவிட்டாலும் சண்டைக்கு எப்போதுமே குறைவு இருப்பதில்லை.


அந்தவகையில் ஆரம்பத்தில் அசீமும் ஆயிஷாவும் சண்டை போட்டிருந்தார்கள். அதனைத் தொடர்ந்து பின்னர் விக்ரமனும், அசீமும் தொடர்ந்து சண்டை போட்டு வந்துள்ளார்கள். இந்நிலையில் நேற்றைய தினம் அசீமிற்கும், adk இற்கும் இடையில் பயங்கரமான சண்டை இடம்பெற்றிருந்தது. அதில் ஒருவருக்கொருவர் மோசமான வார்த்தைகளால் திட்டி கத்தி இருந்தனர்.


இதனைத் தொடர்ந்து இது குறித்த பல ஷாட் பிலிம்ஸ் அன்ட் மீம்ஸ் களும் உருவாகி இருந்தன. அந்தவகையில் தற்போது ஒரு வீடியோ ஆனது சமூக வலைத்தளங்களில் அதிகளவில் வைரலாகி வருகின்றது. அதாவது அந்த வீடியோவில் மகள் போனை எடுத்து மீண்டும் சண்டை போட ஆரம்பித்து விட்டார்களா எனக் கேட்கின்றார். 

அதற்கு தாய் பதறி அடித்து சண்டையா எனக் கேட்கின்றார். உடனே அதற்கு அவர் 'அது பிக்பாஸ் வீட்டில் எனக் கூறுகின்றார்.

இதோ அந்த வீடியோ..!


Advertisement

Advertisement

Advertisement