• May 04 2024

லால் சலாம் ஆடியோ லஞ்ச்... காரில் மாஸ் என்ட்ரி கொடுத்த ரஜனிகாந்த்... குட்டி கதைக்காக காத்திருக்கும் ரசிகர்கள்... வைரல் புகைப்படங்கள் இதோ...

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் Extended Cameo கதாபாத்திரத்தில் நடிக்கும் லால் சலாம் திரைப்பட இசை வெளியிட்டு விழா இன்று சென்னையில் நடைபெறுகின்றது. பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா தயாரித்து வழங்கும் "லால் சலாம்" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்று வருகின்றது.


லால் சலாம் திரைப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்கள் இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தில் ஒரு எக்ஸ்டெண்டட் கேமியோ கதாபாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்துள்ளார்.


மேலும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், தம்பி ராமையா உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். மேலும் விஜய் டிவி புகழ் தங்கதுரை அவர்களும் இந்த திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார்.


இந்நிலையில் சென்னையில் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான், மூத்த திரைப்பட இயக்குனர் ரவிக்குமார், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு மற்றும் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். அது தொடர்பான வைரல் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதோ அந்த புகைப்படங்கள்... 





 

Advertisement

Advertisement

Advertisement