• Jan 18 2025

பொய் பொய்யா சொல்லுறாங்க... மீடியா செய்ற பிழை இதுதான்... பவாதரணியுடன் நிறைய நினைவுகள் இருக்கு... கண்ணீர்விட்ட பிக் பாஸ் யுகேந்திரன்

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

இளையராஜாவின் மகள் பவதாரணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இலங்கையில் நேற்று காலமானார். இந்த தகவல் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விடையம் தொடர்பாக பிக் பாஸ் போட்டியாளர் நடிகர் யுகேந்திரன் செய்தியை மாறி மாறி சொல்லுறாங்க என்று கூறி பேட்டி அளித்துள்ளார். 


கடந்த சில வருடங்களாக பவதாரிணி புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று 5:30 மணியளவில்  இலங்கையில் காலமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியது. இவர் 47 வயதான நிலையில், இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவரின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகியும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.


அவரின் உடல் இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டது. அவரது மறைவிற்கு நேரில் அஞ்சலி செலுத்த, பல்வேறு பிரபலங்களும் வந்த வண்ணம் உள்ளனர். இதன்படி இரவு 10 மணி வரை பவதாரிணி உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளதாம்.


இந்நிலையில் யுகேந்திரன் நான் இப்போ நியூஸ்லாந்தில் இருக்கிறேன். எனக்கு அதிகாலை 4.00 மணிக்குத்தான் இந்த விடையம் தெரிய வந்தது. ரொம்ப அதிர்ச்சியா இருந்தது, சின்ன வயதில் இருந்து ஒன்றாக வளர்ந்தவர்கள் நிறைய நினைவுகள் இருக்கு. 


உண்மையான செய்தி தெரியாம நிறைய பேர் பொய்களை பரப்புறாங்க, அவங்க செக் பண்ணி பார்க்கும் போதே புற்றுநோய் 4ஸ்டேஜ் தான் அத உடனே குணப்படுத்தனும் என்று தான் இலங்கைக்கு பொய் இருக்காங்க போயிட்டு ஒரு வாரம் தான் இருக்கும் அதற்கிடையில் இப்படி ஒரு துயரமான செய்தி காதில் கேள்விபட்டது.


சரியா தவறானு தெரியாம மீடியாகாரவர்கள் பிழையா சொல்லுறாங்க உண்மையை தெரிந்து சொல்லுங்க. இளையராஜா மகள் என்பதை தாண்டி அவங்க நிறைய பாடல்கள் பாடி இருக்காங்க,  படத்துக்கு சோங் கம்போஸ் பண்ணி இருக்காங்க. அவளோட நிறைய நினைவுகள் இருக்கு இப்படி ஒரு விடயம் நடந்தது ஏற்றுகொள்ள முடியாத இழப்புதான் என கூறியுள்ளார்.  

Advertisement

Advertisement