• Feb 22 2025

தாய் அருகே மகள் கல்லறை... கம்பம் அருகே நல்லடக்கம் செய்ய முடிவு - இளையராஜா வீட்டில் நடைபெறும் பணிகள்!

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

சினிமா துறையில் தனது இசையின் மூலம் பிரபலமானவர் தான் இசைஞானி இளையராஜா. இவருக்கு சொந்தமான பண்ணை வீடு கம்பம் அருகே உள்ள லோயர் கேம்ப்பிள் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று அவரது மகள் பவதாரிணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இலங்கையில் மரணம் அடைந்துள்ளார்.


அவரது உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்வதற்காக தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள லோயர் கேம்பில் உள்ள இளையராஜாவிற்கு சொந்தமான பண்ணை வீட்டில் பணிகள் இப்போது நடந்து வருகின்றது. 


இதற்கு முன்பாக தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பிள் உள்ள அவரது சொந்த பண்ணை வீட்டில் அவரது தாயார் சின்னதாய் மற்றும் அவரது மனைவி ஜீவா ஆகியோரே நல்லடக்கம் செய்து மணிமண்டபங்களை கட்டி இளையராஜா வழிபட்டு வருகின்றார். தற்பொழுது தனது மகளின் உடலை நல்லடக்கம் செய்வதற்கு இசையமைப்பாளர் இளையராஜா அங்கு முன்னேற்பாட்டு பணிகளை செய்து வருகின்றார்.


Advertisement

Advertisement