புகழ் பெற்ற ஹாலிவூட் நடிகை சிட்னி ஸ்வீனி குளித்த நீரில் soap தயாரிப்பதாக வெளியான தகவல் தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. அதன்போது, "நீங்களும் இந்த soap போட்டுக் குளித்தால், நான் உங்கள் அருகில் இருப்பது போல இருக்கும்” என்கிறார் ஹாலிவூட் பிரபலம் சிட்னி ஸ்வீனி. இந்தப் பேச்சு சோஷியல் மீடியாவில் வெடிகுண்டாக பரவியுள்ளது. காரணம், அவர் குளித்த நீரை வைத்தே தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் அந்த soap பெட்டிகள் விற்பனைக்கு வர உள்ளன.
2025 ஜூன் 4ம் திகதி அமெரிக்காவில் விற்பனையாகவுள்ள இந்த soap ஆண்களுக்கு மட்டும் என்ற விளம்பர யுத்தியால் சர்ச்சையுடன் வைரலாகியுள்ளது. இதன் விலை, இந்திய மதிப்பில் ரூ. 685 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிட்னி ஸ்வீனி, 26 வயதானவர். அமெரிக்காவின் பிரபலமான நெட்ஃப்ளிக்ஸ் தொடர்கள் மற்றும் படங்கள் மூலம் உலக அளவில் புகழ் பெற்றவர். தனது அழகு, ஆடம்பரமான தோற்றம் மற்றும் வெளிப்படையான பேச்சால், இளைய ரசிகர்களிடம் தனிப்பட்ட following கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்தகைய நடிகை குளித்த நீரில் உருவாகும் soapற்காக அதிகளவான ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
Listen News!