• Apr 26 2024

இவருடைய மகள் தான் பாக்கியலட்சுமி புகழ் ரேஷ்மாவா..யாரும் அறிந்திடாத பல தகவல்கள் இதோ...!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரில் ராதிகா எனும் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ரேஷ்மா பற்றி பார்ப்போம் வாங்க....

பன்முகத் திறமை கொண்ட நடிகை ரேஷ்மா மாதிரி பலர் நம்ப தமிழ் சினிமாவிலும், சின்னத்திரையிலும் இருக்காங்க. ஒரு சிலர் பார்த்து வியந்து போற அளவுக்கு பிரமிப்பான வேலைகளை அவங்க தொழில் சார்ந்து பண்ணிட்டு உள்ளாங்க.என்னடா இது எப்படியெல்லாமா சான்ஸ் கிடைக்கும்னு நீங்க நினைக்கலாம், ஆனா இவங்களுக்கு அப்படி தான் கிடைச்சு இருக்கு. அமெரிக்காவுல என்ஜினீயரிங் படிச்சவங்க இப்போ நம்ப சின்னத்திரையில் மோஸ்ட் வான்டட் சீரியல் நடிகை. இதெல்லாம் எப்படி நடந்துச்சுன்னு வீடியோல பார்ப்போம்.



ரேஷ்மாவோட அப்பா தெலுங்கு திரையுலகில் தயாரிப்பாளராக இருந்து  உள்ளார். அப்போ இருந்தே அப்பா கூட ஷூட்டிங் போறது, அவர் தயாரிக்கும் பாடங்களில் குழந்தை நட்சத்திரமா நடிக்கிறதுனு ஆரம்பமாகிய பயணம்தான் இது. ஆனால், அதன் பின்னர் அவங்க ஸ்கூல், காலேஜ் வாழ்க்கை எல்லாம் அமெரிக்காவுல தான். செயிண்ட் ஜோசப் பல்கலைக்கழகத்துக சாப்ட்வேர் என்ஜினீயரிங் முடிச்சுட்டு, 2 மாசம் சாப்ட்வேர் டெஸ்டிங் புரோகிராம் படிச்சுட்டு வேலை பார்த்து இருக்காங்க.அத்தோடு விமானத்திலும் ஏர் ஹோஸ்டஸாகவும் சில தினங்கள் வேலை பார்த்து உள்ளார்.


அவங்க அப்படி வேலை பார்த்துட்டு இருந்த சமயத்துல இந்தியா வந்த அப்போ, ஒரு ஷாப்பிங் மால்-ல நண்பர்களோடு வெளிய போய் இருக்கார். அப்படி அவங்க போன அப்போ தான் அந்த மேஜிக் மொமென்ட் அவங்க வாழ்க்கையில வந்து இருக்கு. டிவி சேனலுக்கு ஒரு பைட் கொடுக்கணும் அவங்க நண்பர்கள் பேச தயங்குனதால் இவங்க பைட் கொடுத்து இருக்காங்க. சொல்லவா வேணும் அமெரிக்காவுல படிச்சவங்க இங்கிலீஷ்ல பேசி அசத்தி இருந்தாங்க. சில தினங்கள் கழித்து அவங்க பேசின அந்த புரோகிராம்-க்கு நல்ல டி.ஆர்.ச்பி வரவே அந்த சேனலோட தலைமையில் இருந்து ரேஷ்மா-க்கு கால் பண்ணி சேனல்ல நியூஸ் ரீடரா வேலை செய்ய சான்ஸ் கொடுத்து இருக்காங்க. அத்தோடு சரி வந்த வாய்ப்பை தவறவிடக் கூடாதுன்னு இங்கிலீஷ் நியூஸ் ரீடராக உள்ளே போய் Tv5 சேனல்ல brilliant mind, big screen, hi5 போன்ற ஷோஸ்-க்கு Anchoring பண்ணி இருக்காங்க. 


அப்படியே சில சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைக்குது.அத்தோடு  ஜெமினி டிவியில் Celebrity Kitchen அப்படிகுற ஷோ பண்ணி இருக்கிறார். தெலுங்கு சீரியல்களில் நடிச்சும் இருக்கிறார். அப்படி இவங்க தெலுங்கு ஷோஸ் பண்ணிட்டு இருந்த அப்போ உலக நாயகன் கமல் ஹாசனை இன்டெர்வியூ பண்ண வாய்ப்பு கிடைச்சு இருக்கு. ரேஷ்மாவுக்கு அப்போ தெலுங்கு அவ்வளவு சரளாமாக பேச வரலனாலும் 10 கேள்வியை எழுதி வெச்சு கேட்டு இருக்காங்க. கேள்விகள் தீர்ந்து போனதும் என்ன செய்றதுன்னு தெரியாம இங்கீலீஷ்ல பேசி இருக்காங்க கமல் சாரும் இவங்களுக்கு இங்கிலீஷ் தான் நல்ல பேச வருதுன்னு சொல்லி அவரும் இங்கிலீஷ்ல பேசி மாஸ் பண்ணி இருக்காரு. என்னால மறக்கவே முடியாது fan மொமெண்ட் அது-ன்னு ரேஷ்மாவும் சொல்லி இருக்காங்க. 


மேலும் இப்படியே போயிட்டு இருந்த நேரத்துல தமிழ் சீரியல்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. வாணி ராணி சீரியல் மூலமாக தமிழ் -க்கு என்ட்ரி கொடுக்கிறாங்க.  வம்சம் சீரியலிலும் நடிச்சு இருக்காங்க. தேவிகா அப்படிங்குற வில்லி கேரக்டர்ல அறிமுகமாகி சீரியல் வில்லி கேரக்டர் தான் பண்ணிட்டு இருந்தாங்க. வேந்தர் டிவி-யில முதல் முறையா சக்தி அப்படிங்குற கேரக்டர்ல சுந்தரகாண்டம் சீரியலில் ஹீரோயினா அறிமுகம் ஆகுறாங்க.  

நடிகர் பாபி சிம்ஹா இவரோட தம்பி அப்படிங்குறாதால மசாலா படத்தில் நடிக்க சான்ஸ் வருது. படத்தில் 2-வது ஹீரோயினா நடிக்குறாங்க. அதன் பின்னர் அப்படியே கோ-2, VVV போன்ற படங்களில் நடிச்சு இருக்காங்க. இதுல வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் சூரி-க்கு ஜோடியா புஷ்பா அப்படிங்குற கேரக்டர்ல நடிச்சு  தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஃபேமஸானாங்க. 

மேலும் இதுக்கு இடையில கிடைச்ச கேப்-ல நர்சிங் கோர்ஸ் கூட பண்ணி இருக்காங்க. இப்படி நிறைய வேலைகள் பண்றிங்கனு அவங்க கிட்ட கேட்ட அப்போ, எது செஞ்சாலும் 200% அந்த வேலைக்கான உழைப்பை போட்டு பண்ணுவேன், என்னோட பெஸ்ட் கொடுப்பேன்னு சொல்லி சொல்றாங்க.


லாக்டௌன்ல பியானோ வாசிக்கவும் கத்துகிட்டு இருக்காங்க. சும்மாவே எவ்ளோ நேரம் இருக்குறது ஏதாச்சும் செய்யணும்ல அதுக்காக தான் பியானோ வாசிக்க ஆரம்பிச்சேன்னு சொல்றாங்க. இசை மீதான ஆர்வமும் ரேஷ்மாவுக்கு இருந்துச்சு, அப்படி தான் சன் டிவி-யில் வர சன் சிங்கர் ஷோவுக்கும் Anchor-ராக இருந்து இருக்காங்க. அத்தோடு சன் டிவியில் அன்பே வா சீரியல் மூலமாகவும் பல இல்லத்தராசிகளை கவர்ந்து இருக்காங்க. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவாக கலக்கி வருகிறார்.எங்க போனாலும் இப்போ இந்த சீரியல் கதை பேசாம எந்த அம்மாவும் இருக்க மாட்டாங்க. அந்த அளவுக்கு சீரியல் பட்டையை கிளப்பிட்டு இருக்குன்னு சொல்லலாம்.

அத்தோடு சில படங்கள் நடிச்சுட்டு திரும்ப இவங்க அமெரிக்காவுக்கு போன சமயத்துல தான் பிக் பாஸ் வாய்ப்பு கிடைச்சு இருக்கு. பிக் பாஸ் வீட்டுக்குள்ள-யும் ஒரு Neutral கேரக்டரா தான் இருந்தாங்க. அந்த சமயத்துல வீட்டுக்குள்ள இருந்த அப்போ அவங்க பட்ட கஷ்டங்கள், வாழ்க்கையில் அவங்க சந்தித்து பல சிக்கல்கள் பத்தி ஷேர் பண்ணி இருக்காங்க. 

இருந்தும் ரேஷ்மா இப்போ வரை ரொம்ப போல்ட்டான ஒரு பெண்ணாக இருக்காங்க. அத்தோடு உங்க haters-ல எப்படி டீல் பண்ணுவிங்க-ன்னு கேட்டதுக்கு Am sorry …Byee…. சொல்லிடுவேன், அப்படின்னு சிம்பிளா சொல்லிட்டு போய்க்கிட்டே இருப்பாங்க. நிறைய நெகட்டிவ் கமெண்ட்ஸ் வந்தாலும் அதையெல்லாம் பெருசா எடுத்துக்காம அடுத்த அடுத்து என்ன புதுசா பண்ணலாம்னு யோசிச்சுட்டே இருக்காங்க. 

இதுக்கு அவங்க குடும்பமும் ரொம்ப சப்போர்ட்டா இருக்குறதாவும் அவங்க பையனை ரேஷ்மா ஓட அம்மா தான் ஷூட் டைம்ல பார்த்துபாங்க, அதுனால குடும்பத்துக்கு எப்போவும் முக்கியத்துவம் கொடுப்பேன்னு சொல்லி இருக்காங்க. அத்தோடு ஒரு தடவ ஷாப்பிங் மால் போன அப்போ ஒரு லேடி வந்து என்னை கட்டி புடிச்சுகிட்டாங்க. ரொம்ப புடிக்கும்னு சொல்லி ரேஷ்மாவ பாராட்டியும் இருக்காங்க. அது அவங்களுக்கு மறக்க முடியாது Fan momentனு சொல்லி ஒரு இன்டெர்வியூல ஷேர் பண்ணி இருக்காங்க. இவங்களுக்கு Ladies fans தான் அதிகமாம்.

இதுமட்டும் இல்லாம Reshma Talkies அப்படிங்குற யூடியூப் சேனலும் வெச்சு இருக்காங்க. Work Out Routine, Home Tour, shopping Atrocities-னு அங்கேயும் கலக்கிட்டு இருக்காங்க. 

Advertisement

Advertisement

Advertisement