• Jan 19 2025

இந்த பக்கம் அக்கா, அண்ணி கேரக்டர்.. அந்த பக்கம் காமெடி நடிகருக்கு ஜோடி.. புலம்பும் சீரியல் நடிகை..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

’கண்மணி’ ’கீதாஞ்சலி’ உள்பட பல தொடர்களில் நடித்த நடிகை சின்னத்திரையில் தன்னை அக்கா அண்ணி கேரக்டருக்கு மட்டும் அழைக்கிறார்கள் என்றும் பெரியதிரைக்கு சென்றால் அங்கு காமெடி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க அழைக்கிறார்கள் என்றும் புலம்பி வருவதாக கூறப்படுகிறது.

நடிகைகளுக்கு 25 முதல் 30 வயது ஆகிவிட்டாலே அக்கா அண்ணி வேடம் மட்டும்தான் கிடைக்கும் என்றும் ஹீரோயின் வாய்ப்பு கிடைக்காதது மட்டுமின்றி கிடைக்கும் அக்கா அண்ணி கேரக்டர் கூட தொடர்ந்து வரும் வகையில் இல்லாமல் இருப்பது துரதிஷ்டவசமாகவே பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் ’கண்மணி’ ’கீதாஞ்சலி’ உள்ளிட்ட சீரியல்களை நடித்த நடிகை ஹேமலதா சின்னத்திரை மற்றும் பெரிய திரை குறித்து தன்னுடைய புலம்பலை தெரிவித்துள்ளதாக தெரிகிறது. சின்னத்திரையில் அக்கா அண்ணி கேரக்டருக்கு மட்டுமே சீனியர் நடிகைகளை சின்னத்திரை அழைக்கிறது என்றும் அப்படியே அழைத்தாலும் தொடர்ந்து அந்த கேரக்டர்கள் வருவது போல் காட்டுவதில்லை என்றும் கூறியுள்ளாராம்.

இதனை அடுத்து சினிமா பக்கம் செல்லலாம் என்று பார்த்தால் அங்கேயும் அப்படித்தான் என்றும் சீனியர் நடிகர்களை காமெடி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க அழைக்கிறார்கள் என்றும் அப்படியே நடித்தாலும் அந்த கேரக்டருக்கு ஆடியன்ஸ் மனதில் பதியும் வகையில் காட்சிகள் இல்லாமல் இருக்கிறது என்றும் ஆதங்கப்படுவதாக தெரிகிறது.

ஒரு சிறிய கேரக்டரில் நடித்தால் கூட அந்த கேரக்டர் முக்கியத்துவம் தரும் வகையில் இருக்க வேண்டும் என்றும் ஆனால் கொஞ்சம் வயதாகி விட்டாலே சின்னத்திரையும், பெரியதிரையும் நடிகைகளின் நடிப்புக்கும் திறமைக்கும் மதிப்பளிக்காமல் முக்கியத்துவம் இல்லாத கேரக்டர்களை தருகிறார்கள் என்றும் புலம்பி வருவதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement