• Apr 26 2024

அடடே இந்த நடிகையும் துணிவு படத்தில் பாடியுள்ளாரா?- சூப்பராக வெளியாகிய புதிய அப்டேட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

அஜித் நடிப்பில் தற்போது துணிவு படம் தயாராகி உள்ளது. எச்.வினோத் இயக்கியுள்ள இப்படம் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருக்கிறது.

ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகி உள்ள இதில் மலையாள நடிகை மஞ்சு வாரியரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். போனி கபூர் இப்படத்தை தயாரித்து உள்ளார்.


ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். துணிவு படத்தின் ஷூட்டிங் முடிந்து பின்னணி பணிகள் படு வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் துணிவு படத்தில் தான் ஒரு முக்கிய பாடலை பாடி இருப்பதாக நடிகை மஞ்சு வாரியர் போட்டோவுடன் தெரிவித்து இருக்கிறார்.இந்த டுவிட் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருவதால் ரசிகர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.


மேலும் இப்படம் வருகிற ஜனவரி மாதம் பொங்கல் விடுமுறைக்கு ரிலீசாக உள்ளதால், இப்படம் குறித்த அப்டேட்டுகளும் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளன.

Advertisement

Advertisement

Advertisement