• May 20 2024

இனிய நண்பர் விஜயகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்ப விரும்புகிறேன்-டுவிட் செய்த கமல்ஹாசன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜயகாந்தின் கால்விரல்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி நேற்றைய தினம் அகற்றப்பட்டதாக தே.மு.தி.க கட்சி அறிவிப்பினை வெளியிட்டிருந்தது. அதில் நீண்ட வருடங்களாக இருக்கும் நீரழிவு பிரச்சனையால் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி அகற்றப்பட்டது என்று கூறப்பட்டது..

மருத்துவர்கள் கண்காணிப்பில் தற்போது அவர் நலமுடன் இருக்கிறார் என்று விஜயகாந்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் விஜயகாந்த் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான வதந்திகளை கழக நிர்வாகிகள் ,தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விஜயகாந்த் நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப வேண்டும் என அரசியல்வாதிகளும் பிரபல நடிகர்களும் திமுக தொண்டர்களும் வேண்டி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று நடிகர் ரஜனிகாந்த் டுவிட் செய்து இருந்த நிலையில், தற்போது கமல்ஹாசன் தன்னுடைய டுவிட்டில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இனிய நண்பர் விஜயகாந்த் பூரண குணமடைந்து முழு நலமுடன் வீடு திரும்ப விரும்புகிறேன் விரைந்து குணமடைய வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement