• May 09 2024

மை டியர் பூதம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு- படத்தின் உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்தியாவின் தலை சிறந்த நடன இயக்குநர்களில் ஒருவராக வெற்றிக் கொடி நாட்டி வருபவர் நடிகர் பிரபுதேவா. இவர் நடனப்புயல் மட்டுமல்லாது சிறந்த நடிகரும் கூட. இவர் தமிழ் சினிமாவில் "காதலன்" என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இப்படத்தைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்துள்ளார். அது மட்டுமல்லாது விஜய்யை வைத்து "போக்கிரி, வில்லு" போன்ற படங்களை இயக்கியதோடு, ஹிந்தியிலும் சல்மான்கான், அக்ஷய் குமார் ஆகியோரை வைத்து சில படங்களை இயக்கி முன்னணி இயக்குநர்களில் ஒருவராக மாறியுள்ளார்.

இந்நிலையில் இவர் தற்போது என்.ராகவனின் இயக்கத்தில் "மை டியர் பூதம்" என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகர் பிரபுதேவாக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து அஷ்வந்த், பரம் குகனேஷ், சாத்விக், சக்தி, கேசிதா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் படத்தின் ரிலீஸ் உரிமைகளை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும் இப்படம் ஜூலை 15-ஆம் தேதி வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கேள்விப்பட்ட நடிகர் பிரபுதேவாவின் ரசிகர்கள் படம் வெளியாகி பயங்கர ஹிட்டாகும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement