• Dec 04 2023

அஞ்சல பாட்டுக்கு இறங்கி குத்திய GVM..! யாரும் எதிர்பார்க்காத மூவ்மெண்ட்? வீடியோ இணைப்பு

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமித்திரையுலகில் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான 'மின்னலே' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக களம் இறங்கியவர் இவர் கெளதம் வாசுதேவ் மேனன்.

2006 ஆம் ஆண்டு இவர் இயக்கி வெளியிட்ட 'வேட்டையாடு விளையாடு' திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. அதனை தொடர்ந்து 'வாரணம் ஆயிரம்' திரைப்படத்திற்காக இவருக்கு முதல் தேசிய விருது கிடைத்தது.இவர் இயக்கத்தில் வெளியான ஒவ்வொரு திரைப்படங்களும் ஒரு தனித்துவமான சிறப்பு காணப்படுகிறது.

இறுதியாக கடந்த 2019 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான 'என்னை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படத்தை இயக்கியிருந்த கௌதம் வாசுதேவ் மேனன், கடந்த சில வருடங்களாக நடிகராக புதிய பரிமாணம் எடுத்து தமிழ் திரையுலக ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். 

இந்நிலையில், பொது இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட GVM அங்கே இசைக்கப்பட்ட அஞ்சல பாடலுக்கு செம்மையாக ஆடிய மூவ்மெண்ட் வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அதன்படி, அவர் ஆடிய 'அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல' பாடல் தற்போது மீண்டும் இணையதளத்தில் ட்ரெண்ட் ஆகிவருகின்றது. 



Advertisement

Advertisement

Advertisement