• Jan 19 2025

விஜயா குடும்பத்துக்கு பாட்டி வைத்த டாஸ்க்.. பல்பு வாங்கிய விஜயா! வெளியே கிளம்பிய முத்து

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், முத்து பாட்டியை காரில் அழைத்து வர, முத்துவின் முகத்தை பார்த்த பாட்டி என்ன நடந்தது என கேட்கின்றார். அதற்கு நைட் சரியா தூங்கல என சமாளிக்கின்றார் முத்து.

வீட்டுக்கு போனதும் வாசலில் அண்ணாமலை பாட்டியை வரவேற்று அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லுகிறார். அதன்பின்பு மீனா ஆர்த்தி எடுத்துச் செல்ல விஜயா அதை தடுத்து ரோகிணியையும் ஸ்ருதியையும் எடுக்குமாறு ஆர்த்தியை வாங்கி கொடுக்கிறார். ஆனாலும் பாட்டி மீனாவை வரச் சொல்லி மூன்று பேரும் சேர்ந்து எடுக்குமாறு சொல்லுகிறார். மேலும் உள்ளே சென்ற பாட்டி தனக்காக செய்து வைத்துள்ள டெக்கரேஷன்களை பார்த்து சந்தோஷப்படுகிறார்.

இதைத் தொடர்ந்து மீனா தனது அம்மாவுக்கு போன் பண்ணி பாட்டியின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு வருமாறும், இங்கதான் சாப்பாடு என்றும் சொல்லுகிறார். முத்துவும் தனது  பங்கிற்கு மீனாவின் அம்மாவிடம் வீட்டுக்கு வருமாறு சொல்லுகிறார்.


அதன் பின் பாட்டி என்ட மனசுக்கு பிடிச்ச கிப்ட் தாராங்களோ, நானும் அவங்களுக்கு ஒரு கிப்ட் கொடுப்பேன் என சொல்ல, எல்லாரும் ஆச்சரியப்படுகிறார்கள்.அதற்கு விஜயா அது என்ன கிப்ட் என கேட்கிறார். பாட்டி கிட்ட வருமாறு சொல்லி அது கொடுக்கும் போதே தெரியும் என பல்பு கொடுக்கிறார்.

அடுத்து ரோகிணி மனோஜிடம் நீதானே மூத்த பேரன் பாட்டிக்கு என்ன பிடிக்கும் என்று சொல்லு என கேட்க, தனக்கு சரியா தெரியாது ஆனா சின்ன வயசுல இருந்தே பாட்டி இப்படி போட்டி  வைப்பாங்க அதுல முத்து மட்டும் தான் ஜெயிப்பான் என சொல்லுகிறார்.

இறுதியாக வீட்டில் இருந்தால் பிரச்சனை வரும் என முத்து வெளியே கிளம்பி செல்கிறார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement