தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படம் "குட் பேட் அக்லி" இப் படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
"விடாமுயற்சி" படத்தின் பிறகு த்ரிஷா-அஜித் ஜோடி மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளது. இந்த படத்தில் சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரியா வாரியர் உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இப்படம் ஒரு அதிரடியான கதைக் களத்துடன் உருவாகி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் "குட் பேட் அக்லி" திரைப்படத்தின் ப்ரீ புக்கிங் பரபரப்பாக இடம்பெற்றுள்ள நிலையில் இதுவரை உலகளவில் ரூ. 22 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இது படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பைக் ஏற்படுத்தியுள்ளது.
Listen News!