பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, எழில் போனில கதைத்துக் கொண்டிருக்கிறார். அப்ப பாக்கியா வந்து நிக்கிறதைப் பாத்து டெகரேஷன் வேலை எல்லாம் நல்லா போய்ட்டு இருக்கு என்று சொல்லுறார். இதனை அடுத்து பாக்கியா ஈஸ்வரி கிட்ட வந்து சில விஷயங்கள பொறுமையா ஜோசிச்சுச் செய்வோம் என்று சொன்னா நீங்க ஒருத்தரும் கேக்கவே இல்ல என்று சொல்லி கோபப்படுறார். மேலும் அவசரத்திற்கான பலனை அனுபவிக்கின்ற நேரம் வந்திட்டு என்று சொல்லுறார்.
அதைக் கேட்ட ஈஸ்வரி நீ ஏதாவது சொல்லோணும் என்று நினைச்சா நேரடியாவே சொல்லு என்கிறார். அதுக்கு பாக்கியா நிதீஷோட அப்பா சுதாகர் ரெஸ்டாரெண்டுக்கு வந்திருந்தார் என்று சொல்லுறார். மேலும் என்னோட ரெஸ்டாரெண்ட இனியாவுக்கு கிப்டா தரச் சொல்லிக் கேக்கிறார் என்று கோபமாகச் சொல்லுறார். அதைக் கேட்டு எல்லாரும் ஷாக் ஆகுறார்கள்.

இதைக் கேட்ட கோபி பாக்கியாவப் பாத்து நீ சம்மந்தியோட சேர்ந்து பிஸ்னஸ் பண்ணா நல்லா லாபம் கிடைக்கும் என்று சொல்லுறார். இதைக் கேட்ட பாக்கியா சுதாகர் எல்லா விஷயமும் பக்கா பிளானோட தான் செய்யுறார் என்று கோபமாகச் சொல்லுறார். இதனை அடுத்து ஈஸ்வரி ரெஸ்டாரெண்ட கொடுக்கலாம் தானே உன்னோட பொண்ணுக்குத் தானே கொடுக்கப் போற என்று சொல்லுறார். மேலும் உன்னோட பொண்ணு வாழ்க்கையை விட ரெஸ்டாரெண்ட் முக்கியமா இருக்கோ என்று கேக்கிறார்.
இதனை அடுத்து பாக்கியா தன்னோட ரெஸ்டாரெண்ட யாருக்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது என்று சொல்லுறார். பின் இனியா பாக்கியா கிட்ட வந்து இந்த ரெஸ்டாரெண்ட எதுக்காகவும் விட்டுக் கொடுக்காதீங்க என்று சொல்லுறார். இதனை அடுத்து ஈஸ்வரி பாக்கியாவப் பாத்து இந்தக் கலியாணத்த நிப்பாட்ட ஏதாவது செய்தால் நான் உன்ன சும்மா விடமாட்டேன் என்று சொல்லுறார். இதனை அடுத்து கோபி சுதாகரைப் பார்க்க அவரோட வீட்டுக்குப் போறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!