• Aug 14 2026

தியேட்டர்களில் ஜார்ஜ்குட்டியின் ஆட்டம் செல்லாது.. மீனா- மோகன்லால் கூட்டணியால் விபரீதம்

shali / 2 months ago

Advertisement

Listen News!

மலையாள திரையுலகில் பெரும் வெற்றியை பெற்ற ‘திரிஷ்யம்’ தொடரின் மூன்றாவது பாகமான ‘திரிஷ்யம் 3’, ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்தது. ஜீத்து ஜோசப் இயக்கத்தில், மோகன்லால் மற்றும் மீனா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படம், 2013-ல் வெளியான முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவான தொடரின் அடுத்த முக்கிய அத்தியாயமாகும்.

முதல் பாகம் ரூ.5 கோடி செலவில் தயாராகி உலகளவில் ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. பின்னர் அதன் கதையின் தாக்கம் காரணமாக தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் சீன மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு பரவலான வரவேற்பைப் பெற்றது. 


அதேபோல், 2021-ல் வெளியான ‘திரிஷ்யம் 2’ நேரடியாக ஓடிடியில் வெளியான போதிலும், விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வெற்றியைப் பெற்றது.

இந்த வெற்றித் தொடரின் மூன்றாவது பாகமாக உருவான ‘திரிஷ்யம் 3’, கடந்த மாதம் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. வெளியான முதல் நாளிலிருந்தே படம் நல்ல வரவேற்பைப் பெற்று, தற்போது வரை ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் இந்த ஆண்டு மலையாள சினிமாவில் அதிக வசூல் செய்த படமாகவும் இது இடம்பிடித்துள்ளது.

இந்நிலையில், திரையரங்க ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்று வரும் நிலையில், ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த ஓடிடி வெளியீட்டு தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ‘திரிஷ்யம் 3’ திரைப்படம் ஜூன் 18-ம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக உள்ளது.

Advertisement

Advertisement