• Mar 08 2026

காலம் மாறினாலும் அந்த சிரிப்பு மாறல... எளிமையான தோற்றத்தில் திருப்பதியை தரிசித்த ஜெனிலியா

shali / 6 days ago

Advertisement

Listen News!

பிரபல நடிகை ஜெனிலியா தற்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. எளிமையான தோற்றத்தில், பக்தி உணர்வுடன் கோவிலுக்கு வந்திருந்த அவரை பார்த்த ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.


திருப்பதி ஏழுமலையான் கோவில் இந்தியாவின் மிகப் புகழ்பெற்ற தலங்களில் ஒன்றாகும். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வரும் இந்தத் தலத்தில், நடிகை ஜெனிலியாவும் சமீபத்தில் சாமி தரிசனம் செய்துள்ளார். 

அவரை கோவிலில் கண்ட பக்தர்கள் பலரும் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது.

ஜெனிலியாவை பார்த்த ரசிகர்கள், “இப்பவும் அதே மாதிரி தான் இருக்காங்க.!” என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, சச்சின் படத்தில் அவர் நடித்த தோற்றத்துடன் ஒப்பிட்டு பலரும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். 

Advertisement

Advertisement