• Jul 12 2025

ஜாக்கி சான் முதல் வரலட்சுமி வரை... – நாளைய தினம் திரையரங்குகளை கலக்கும் சினிமாக்கள்..!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா உலகத்தில் “வெள்ளிக்கிழமை” என்றால் அதுவே ஒரு பண்டிகை மாதிரி தான். வார இறுதியில் வெளியாகும் திரைப்படங்கள் தான் ரசிகர்களை திரையரங்குகளுக்கு இழுக்கும் முதல் காரணமாக மாறியுள்ளது. இந்த வாரமும் அதற்கேற்ப, வெள்ளிக்கிழமை மே 30, 2025 அன்று வெளியீட்டிற்கு காத்திருக்கும் பல படங்கள் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.


அந்த வகையில், இப்போது வெளியாக உள்ள 5 முக்கிய திரைப்படங்களைப் பற்றிய முழுமையான தகவல்களை இந்த செய்தியில் தெரிந்து கொள்ளலாம். அதனடிப்படையில், "கராத்தே கிட்: லெஜண்ட்ஸ்", "ஜின் – தி பெட்",  "தி வெர்டிக்ட்", "மனிதர்கள்" மற்றும் "ராஜபுத்திரன்" போன்ற படங்கள் நாளை திரையரங்கை கலக்கவுள்ளன.


ஜாக்கி சான் ரசிகர்களுக்கு வெற்றியா? அல்லது ஜின் மர்மங்களைக் காண ஆர்வமா? வரலட்சுமியின் நீதிக்காகக் குரல் கொடுக்கிற “தி வெர்டிக்ட்” அதிர்ச்சியூட்டுமா? எனப் பல கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளன. என்ன நடந்தாலும் ஒன்று மட்டும் உறுதி. என்னவென்றால், இந்த வார வெள்ளிக்கிழமை தமிழ்சினிமா ரசிகர்களுக்கு ஒரு விழா மாதிரியே இருக்கும்! அத்துடன், இந்த சினிமா அப்டேட் அனைத்து ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement

Advertisement