• Aug 05 2025

தனுஷ் முதல் அமீர்கான் வரை... நாளை திரையரங்கை கலக்க வரும் 5 சூப்பர் ஹிட் படங்கள்!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ், ஹிந்தி மற்றும் ஹாலிவூட் என மூன்று மொழிகளைத் தொட்டுக் கொண்டு, ஜூன் 20, 2025 நாளில் திரையரங்குகளில் ஐந்து முக்கியமான படங்கள் வெளியாகவுள்ளன. இந்த ஐந்து படங்கள் ஒரே நாளில் ரிலீஸாவதனை ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடத் தயாராகி வருகின்றனர்.


பிரபல இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'குபேரா' படம், ஜூன் 20 அன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் என பான் இந்தியா ரிலீஸ் ஆகிறது. சமூக அக்கறையும், குடும்ப உணர்வுகளும் கலந்த இப்படத்தில் தனுஷின் நடிப்பு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


‘பாணா காத்தாடி’, ‘பரதேசி’, ‘இமைக்கா நொடிகள்’ படங்களுக்குப் பிறகு, அதர்வா நடிப்பில் திரைக்குத் தயாராகும் புதிய படம் DNA. அத்துடன், வைபவின் ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’ , அமீர்கானின் 'சித்தாரே ஜமீன் பர்' மற்றும் எலியோ அனிமேஷன் போன்ற படங்களும் நாளைய தினம் திரையரங்குகளை கலக்கவுள்ளது. 


ஒரே நாளில் இந்த அளவு பன்முகப்படங்கள் ரிலீஸாவதனை ரசிகர்கள் விழாவாகவே கொண்டாட இருக்கின்றார்கள். Twitter, Instagram  மற்றும் YouTube-ல், #KuberaFromTomorrow , #AtharvaaDNA , #VaibhavGangsters போன்ற ஹாஷ்டாக்குகள் ட்ரெண்டாகி வருகின்றன.


Advertisement

Advertisement