• Dec 06 2024

முத்து போட்ட திருட்டுப்பழியால் விபரீத முடிவில் மீனா? பார்வதி விஜயாவுக்கு செக்

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், முத்து பார்வதி வீட்டுக்கு செல்கின்றார். அங்கு இப்படி மீனா மீது பழி போட்டுட்டீங்களே அவள் ஏதும் தவறான முடிவு எடுத்தால் என்ன செய்வீங்க என்று பார்வதியிடம் கேட்க, தான் அப்படி ஒன்றும் சொல்லவில்லை எல்லாம் விஜயாத்தான் என்று சொல்லுகின்றார்.

மேலும் அந்த பணம் திருட்டு போன விஷயத்தில் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்குமாறு சொல்லுகின்றார் முத்து. இதனால் பதற்றப்பட்ட பார்வதி அந்த பணம் என்னுடையது இல்லை என்று உண்மையை உடைக்கின்றார். அப்படி என்றால் வக்கீல் இங்க வந்தாரா? என முத்துக் கேட்க பார்வதி நடந்த விஷயத்தை சொல்லுகின்றார்.

இதை தொடர்ந்து வீட்டுக்கு சென்ற முத்து மீனாதான் காசு எடுத்தார் என்று ஒரு நாடகம் ஆடுகின்றார். அண்ணாமலையும் ஸ்ருதியும் மீனா அப்படி செய்திருக்க மாட்டார் என்று ஆணித்தரமாக சொல்ல, இல்லை இதுதான் உண்மை. மீனாதான் காசை எடுத்தார் என்று முத்து சொல்லுகின்றார்.


இதனால் மீனா மீது கம்ப்ளைன்ட் கொடுக்குமாறு விஜயாவிடம் சொல்ல, அவர் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கின்றார். அதன் பின்பு வக்கீல் இடம் விஜயா காசு வாங்கியதை முத்து அண்ணாமலையிடம் சொல்லுகின்றார். இதனால் காசும் வாங்கிவிட்டு மீனா மீது பழி போட்டதால் மன்னிப்பு கேட்க்குமாறு சொல்லுகின்றார். ஸ்ருதியும் மீனாவிடம்  மன்னிப்பு கேட்க வேண்டும் என சொல்ல, தன்னால் முடியாது என்று விஜயா சொல்லுகின்றார்.

இறுதியாக முத்து நீங்க மன்னிப்பு கேட்க வேண்டாம். ஆனால் இனி மீனாவையும் அவ குடும்பத்தையும் திருட்டு குடும்பம் என்று சொன்னால் அப்ப தெரியும் என்று மிரட்டுகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement