• Sep 20 2024

விஜயதேவரகொண்டா நடித்துள்ள லைகர் திரைப்படத்தின் முதல் விமர்சனம்- யார் வெளியிட்டுள்ளார் தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய்தேவர்கொண்டாவின் அதிரடி ஆக்சன் கலந்த நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் லைகர்.இப்படத்தில் கதாநாயகியாக அனன்யா பாண்டே நடித்துள்ளார்.ரம்யா கிருஷ்ணன் முக்கிய வேடத்தில் விஜய் தேவரகொண்டாவின் அம்மாவாக நடித்துள்ளார்.

Puri connects மற்றும் பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான Dharma Productions நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.இப்படம் ஹிந்தி தெலுங்கு தமிழ் கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஆகஸ்ட் 25, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை பிரபல நடிகர் ஆர்.கே. சுரேஷ் தனது ஸ்டூடியோ 9 நிறுவனம் மூலம் கைப்பற்றி உள்ளார் என அதிகாரப்பூர்வமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரும் எதிர்பார்ப்பில் நாளை வெளியாகவுள்ள இப்படம் வெற்றிபெறுமா? என்ற கேள்வி பலருடைய மனதில் உள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் முதல் விமர்சனத்தை வெளிநாட்டு தணிக்கை குழுவின் உறுப்பினர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, " படம் மாஸாக இருக்கிறது. விஜய் தேவரகொண்டா படத்தை தாங்கி நிற்கிறார். ஒன் மேன் ஷோ. ரம்யா கிருஷ்ணன் கதாபாத்திரம் எதிர்பார்க்காத ஒன்று. டெரிஃபிக் ஆக்ஷன் & இயக்கம். மற்றபடி படம் ஆவெரேஜ் தான் " என்று ரசிகர்களுக்கு வருத்தமளிக்கும் வகையில் விமர்சனத்தை குறிப்பிட்டுள்ளார்.பொறுத்திருந்து பார்ப்போம் நாளை படம் எப்படி வந்துள்ளது என்று..


Advertisement

Advertisement