• Jun 02 2026

வைக்கம் விஜயலட்சுமி குரலில் மனதை உருகவைக்கும் ‘அங்கீகாரம்’ படப் பாடல் வெளியானது.!

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் என பல பிரபலங்களும் ஹீரோவாகும் புதிய போக்கு அதிகரித்து வரும் நிலையில், தயாரிப்பாளர் ஒருவர் ஹீரோவாக மாறியிருக்கும் சம்பவம் தற்போது கவனம் ஈர்த்துள்ளது.

நயன்தாரா நடித்த அறம், சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ, டாக்டர், அயலான் உள்ளிட்ட படங்களை தயாரித்த கேஜேஆர் (KJR) ராஜேஷ், தற்போது முதன்முறையாக ‘அங்கீகாரம்’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார்.

இந்த படத்தை தென்பதியான் இயக்க, இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். படம் இந்த மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த படத்தில் கேஜேஆர் ராஜேஷ் வழக்கமான ஹீரோவாக அல்லாமல் ஒரு தடகள வீரராக நடித்துள்ளார். இதற்காக அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக கடுமையான உடற்பயிற்சி மேற்கொண்டு, நிஜ தடகள வீரர் போல உடல் அமைப்பை மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.


மேலும் இந்த திரைப்படம் விளையாட்டு, நீதிமன்றம் மற்றும் சமூக நீதியை மையமாகக் கொண்ட கதையாக உருவாகியுள்ளது. விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை சிரமங்கள் மற்றும் விளையாட்டு துறையின் மறைமுக பிரச்சனைகள் ஆகியவை படத்தில் அழுத்தமாக பேசப்படுகின்றன என படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த படத்திற்காக ரூ.75 லட்சம் செலவில் சிறப்பு நீதிமன்ற செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் ‘அங்கீகாரம்’ படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப் பாடலை வைக்கம் விஜயலட்சுமி பாடியுள்ளார். இந்த பாடல் கேட்பவர்களின் மனதை உருக்கும் வகையில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இந்த பாடலுக்கு பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement