• Aug 05 2026

அவங்க ரெண்டு பேரும் நான் விட்ட கேப்ல தான் பிரபலமானாங்க.! ஜெய் கூறிய உண்மை

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

2002 ஆம் ஆண்டு விஜய் நடித்த ‘பகவதி’ படத்தில் துணை நடிகராக அறிமுகமானவர்தான் நடிகர் ஜெய். அதற்குப் பின்பு 5 வருட இடைவெளிக்குப் பிறகு ‘சென்னை 600028’ என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். இந்தப் படம் சூப்பர் ஹிட் ஆனது.

இதைத்தொடர்ந்து ‘சுப்பிரமணியபுரம்’ படத்தில் நடித்து நல்ல வரவேற்பைப் பெற்றார். அந்தப் படமும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சிறந்த வரவேற்பை பெற்றது. பின்னர் ‘எங்கேயும் எப்போதும்’, ‘கோவா’, ‘ராஜா ராணி’ போன்ற பல ஹிட் படங்களில் நடித்தார்.

நடிகர் ஆவதற்கு முன்பே ஜெய்க்கு இசை மீது ஆர்வம் இருந்ததாகவும், இதனால் பிரபல இசையமைப்பாளர் தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவாவிடம் இசை கற்றுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் ‘வீரபாண்டியபுரம்’, ‘பட்டாம்பூச்சி’ போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார்.


இந்த நிலையில் நடிகர் ஜெய் கூறிய கருத்து ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியதாவது,

“ஒரு வெற்றிப் படத்திற்கு பிறகு நல்ல கதைக்காக நீண்ட காலம் காத்திருப்பது தவறான முடிவு. அந்த இடைவெளியில் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி போன்ற புதிய கதாநாயகர்கள் திரையுலகிற்கு அறிமுகமாகி முன்னணி இடத்தை பிடித்தனர். சினிமாவுக்கு சிறிய இடைவெளி விட்டால் புதிய நடிகர்கள் வருகிறார்கள். இடைவெளி விடாமல் நடித்தாலும் சில படங்கள் வெற்றி பெறுவதில்லை. இதற்கான சரியான தீர்வு இன்னும் கிடைக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement