• May 20 2024

தளபதி பிறந்தநாளுக்கு பெற்றோலை இலவசமாக வழங்கிய ரசிகர்கள்- அதுவும் எங்கு தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் அசைக்கமுடியாத உச்சத்தில் உள்ளவர் தளபதி விஜய் இவரது 48வது பிறந்தநாள் நேற்று முன் தினம் கொண்டாடப்பட்டது. கோலிவுட் முதல் பாலிவுட் வரை திரையுலக பிரபலங்கள் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் என பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

இவருடைய பிறந்த நாளை முன்னிட்டு தளபதி நடித்து வரும் வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் 2nd ,3rd போஸ்டரும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் தளபதி பிறந்தநாளில் மக்களுக்கு இலவசமாக பெற்றோல் வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில் தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த வாரம் முழுக்க நலத்திட்ட உதவிகள் வழங்க நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த விஜய் மக்கள் இயக்கத்தினர் இலவசமாக பெட்ரோல் வழங்கியுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்து ஆச்சாள்புரத்தில் அமைந்துள்ள தனியார் பெட்ரோல் பங்க் ஒன்றில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்க தொண்டர் அணி சார்பாக ஹெல்மெட் அணிந்து வரும் இருசக்கர வாகன ஓட்டுநர்களுக்கு இலவசமாக பெட்ரோல் வழங்கப்பட்டது.

முதலில் வந்த 100 பேருக்கு மட்டுமே இலவச பெட்ரோல் வழங்கப்பட்டது அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 100 ரூபாய்க்கு பெட்ரோல் போடப்பட்டது இந்த செய்தி அறிந்து ஏராளமானோர் அப்பகுதியில் குவிந்தனர். இதனால் சிறிது நேரம் கூட்ட நெரிசல் ஏற்பட்டது தொடர்ந்து வந்திருந்தவர்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் இனிப்புகளை வழங்கினார்.

அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது

Advertisement

Advertisement