• Aug 13 2025

"மதராஸி" படத்தின் சூப்பரான அப்டேட்டைப் பகிர்ந்த படக்குழு..! மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!

subiththira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வெற்றிப் பாதையில் பறந்து செல்கின்ற நடிகர் சிவகார்த்திகேயன், தனது புதிய திரைப்படமான ‘மதராஸி’ மூலம் மீண்டும் பெரிய திரையில் மின்ன தயாராகிறார். இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையில் உருவாகி வருகிறது. 


மேலும், ரசிகர்களின் ஆவலையும், திரை அனுபவத்தையும் அதிகரிக்க செய்யும் வகையில், இந்தப் படத்தின் மேக்கிங் க்ளிம்ப்ஸ் (Making Glimpse) வீடியோ, வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல், திரையரங்குகளில் மட்டும் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.


இந்த அறிவிப்பு வெளியாகியதும், ரசிகர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை யூடியூப் போன்ற தளங்களில் வீடியோக்கள் வெளியாகி வந்ததுடன், தற்போது நேரடியாக திரையரங்குகளுக்குச் சென்று பார்க்க வேண்டிய கட்டாயத்தை இந்த அறிவிப்பு ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement