• Oct 04 2025

“கூலி” திரைப்படம் டிரெய்லர் வெளியிட்ட படக்குழு...! மகிழ்ச்சியில் ரசிகர்கள்...!

Roshika / 2 months ago

Advertisement

Listen News!

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் ஹிட்டான இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய திரைப்படம் “கூலி”, ஆகஸ்ட் 14-ம் தேதி திரையிடப்பட உள்ளது. அனிருத் இசையமைக்க, இந்த மாஸ் ஆக்‌ஷன் படத்தில் இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் ஒருங்கிணைந்து நடித்துள்ளனர்.


“கூலி” படத்தில் ரஜினிகாந்திற்கு இணையாக, அமீர் கான், சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் முதல் பாடல் “கூலி தி பவர்ஹவுஸ்” சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களிடம் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது. பாடல் பட்டி தொட்டி எங்கும் தாறுமாறாக ஹிட் ஆகி வருகிறது. அனிருத் usual signature ஸ்டைலில் வந்துள்ள இந்த பாடல், ரஜினிகாந்தின் எனர்ஜி மற்றும் மாஸ் கேரக்டருடன் பிஞ்சிப் பதுங்கியுள்ளது.


“கூலி” படத்தின் புரொமோஷன் பணிகள் தற்போது வேகமாக நடந்து வருகிறது. அண்மையில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் படக்குழு கலந்துகொண்டது. தற்போது, இப்படத்தின் அதிகாரபூர்வ டிரெய்லரும் வெளியாகி ரசிகர்களை மேலும் கவர்ந்துள்ளது.

Advertisement

Advertisement