பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் எட்டு பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை உடன் முடிவுக்கு வர உள்ளது. இதனால் போட்டியாளர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் யாருமே எதிர்பார்க்காத வகையில் தீபக் மற்றும் அருண் எலிமினேட் ஆகி வெளியே சென்றிருந்தார்கள். இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
d_i_a
ஒவ்வொரு சீசனிலும் அன்ஃபேர் எவிக்சன் நடைபெறும். அதில் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்களிடம் காணப்பட்டது. ஆனால் இந்த முறை சற்று வித்தியாசமாக கையாண்டு உள்ளார் பிக்பாஸ்..
அந்த வகையில் பணபெட்டி டாஸ்க்கை வைத்து அதனை குறிப்பிட்ட நேரத்திற்குள் தூக்கிக்கொண்டு ஓடி வர வேண்டும், அவ்வாறு ஓடி வர முடியாதவர்கள் எவிக்ஷன் செய்யப்படுவார்கள், அவர்கள் இந்த நிகழ்ச்சியில் மேலும் தொடர முடியாது எனக் கூறப்பட்டது.
இந்த டாஸ்க்கில் இறுதியாக ஜாக்குலின் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு மீண்டும் வீட்டுக்குள் வர தாமதமானதால் அவர் எலிமினேட் ஆனார். இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், ஜாக்குலின் வெளியேற்றத்தை தாங்கிக் கொள்ள முடியாத ரசிகை ஒருவர் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து அந்த ரசிகை தனது எக்ஸ் தள பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். அதில், உங்கள நம்பி ஷோ பார்த்ததற்கு இப்போ எங்க கொண்டு வந்துவிட்டீங்கனு பாத்தீங்களா என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், ஜாக்குலின் உங்களுக்கு போர்க்குணம் ஜாஸ்தி தான். மேலும், மஞ்சரி மற்றும் தீபக் ஆகிய இருவரும் கூட இறுதிப் போட்டிக்கு தகுதியானவர்கள் தான். நான் இப்போது நன்றாக இருக்கிறேன் என தெரிவித்து உள்ளார்.
இதேவேளை, அவர் பட ஷூட்டிங் காரணமாகவே இரத்த அழுத்தம் குறைவாக இருந்து, தூங்க முடியாமல் மன அழுத்தம் ஏற்பட்டதாக மீண்டும் ஒரு பதிவில் தெரிவித்து உள்ளார்.
Listen News!