பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் எட்டில் எலிமினேட்டாகி வெளியேறியவர்களை வைத்து பன் பண்ணும் விதமாக பிக்பாஸ் பன்அன்லிமிட்டட் ஷோ நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை சபரி தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆகி சென்ற தீபக் மற்றும் அருணை வைத்து கலாய்த்து உள்ள சபரி. தற்போது இது தொடர்பான ப்ரோமோ வெளியாகி வைரலாகியுள்ளது.
d_i_a
அதில், பிக்பாஸ் வீட்டில் அருண், தீபக் இருக்கும்போது நடைபெற்ற ஸ்கூல் டாஸ்கின் போது அருணுக்கு வர்ஷினியை வைத்து க்ரஷ் என கிண்டல் பண்ணி இருப்பார்கள். அதைப் பற்றி கேட்ட போது அருண் வெட்கத்தில் பதில் சொல்ல முடியாமல் தவிக்கின்றார்.
மேலும் அங்கிருந்த தீபக்கும் பின்னாலையே போனியேடா.. என்னோடு வா வீடு வரைக்கும்.. என்ற பாட்டெல்லாம் பாடுனியே என கலாய்த்தார்.
மேலும் அண்ணி எப்படி இருக்காங்க அருண்? என்று கேட்ட சபரி, வெளியில கூட்டிட்டு போய் நல்லா உறிச்சு இருப்பாங்களே என அருணை வைத்து செய்துள்ளார். தற்போது இந்த ப்ரோமோ வைரலாகி வருகின்றது.
Listen News!