• May 29 2023

பிரபல யூடியூபர் இர்பான் கார் பயங்கர விபத்து.. பெண் பலி.. திருமணமான சில நாட்களில் இப்படியொரு துயரமா..?

Aishu / 2 days ago

Advertisement

Listen News!

யூடியூபர் என்ற பெரிய அங்கீகாரத்துடன் முக்கிய பிரபலமாக திகழ்ந்தவர் தான் இர்பான் .இவர் உணவுகளின் சுவை பற்றி ரிவியு கொடுத்து வருபவர்.

சமீபத்தில் பிரபல யூடியூபர் இர்பான் திருமணம் சிறப்பாக நடந்த நிலையில் தற்போது அவருடைய கார் மோதி பெண் ஒருவர் உயிரிழந்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

 அத்தோடு செங்கல்பட்டு அருகே மறைமலைநகர் என்ற பகுதியில் நேற்று இரவு பிரபல யூடியூபர் இர்பான் பென்ஸ் கார் மோதியதில் பத்மாவதி என்ற பெண் உயிர் இழந்துள்ளார். 

 

யூடியூபர் இர்பானின் காரை அவருடைய ஓட்டுனர் அசாருதீன் என்பவர் ஒட்டியதாக தெரிகிறது. எனினும் இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் 

 அத்தோடு காரை டிரைவர் அசாரூதின் தான் ஓட்டினாரா என்பது குறித்து உறுதி செய்ய சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.திருமணம் நடந்த ஒரு சில நாட்களில் யூடியூபர் இர்பானின் கார் மோதிப் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement