• Jan 18 2025

எங்க கண்ணு முன்னே குழந்தையின் உசுரு போயிடுச்சு.. கண்ணீர்மல்க கதறிய தாய்! அறந்தாங்கி நிஷாவின் துணிச்சலான செயல்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவி அறந்தாங்கி நிஷா மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகின்ற நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் அவரை சந்தித்து அழுது புலம்பியுள்ள வீடியோ வைரலாகியுள்ளது.

திருமணத்திற்கு பின் ஒரு பெண் ஜெயிக்கிறாள் என்றால் அவருக்கு துணையாக அவரது கணவர் இருக்கிறார் என்பது தான் உண்மை. அவரது உதவி இல்லாமல் ஒரு பெண் சுதந்திரமாக தனது பயணத்தில் ஜொலிக்க முடியாது. அப்படி சின்னத்திரையில் கலக்க ஆரம்பித்து இப்போது வெள்ளித்திரையிலும் கலக்கி வருபவர் தான் அறந்தாங்கி நிஷா. 

இந்த நிலையில்,  மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யப்போன இடத்தில், அங்கு ஒரு பெண் தன்னுடைய குழந்தை தன் முன்னே இறந்து போய்விட்டது என்று கதறி அழுதபடி பேசி இருக்கிறார்.


அதோடு இன்னொரு பெண்ணும் தன்னுடைய தந்தை இறந்ததால் தான் இனி படிக்கப் போவதில்லை என்று சொன்னதை கேட்டு அறந்தாங்கி நிஷா அந்த பெண்ணுக்கு அறிவுரையும் கூறி இருக்கிறார்.

நடிகை அறந்தாங்கி நிஷா வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வரும் நிலையில், தென் மாவட்டங்களுக்கும் உடனே சென்று தன்னால் முடிந்த அளவிற்கு உதவியை செய்துள்ளார்.

அதன்படி, அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தண்ணீர் பாட்டில், உணவு, பெண்களுக்கு நாப்கின் போன்றவற்றை வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

இதன்போது, நாங்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த அரசியல்வாதிகள் கூட நாங்கள் இருக்கிறோமா இல்லையா என்று பார்க்க வரவில்லை. ஆனால் நீங்க வந்து இருக்கீங்க என்று பேசி அங்கிருந்தவர்கள் கண்ணீரோடு பேசியுள்ளனர்.


அதில் ஒரு பெண், தனது குழந்தை தன்னுடைய கண் முன்னே அந்த மழை வெள்ளத்தில் இறந்து போய்விட்டது என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

வெள்ளம் திடீரென்று வீட்டிற்குள்ளே வந்த நிலையில், நாங்கள் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்க, தனது மாமா குழந்தையை வைத்து கொண்டிருந்ததாகவும், பிறகு என்னுடைய மாமனார் என் குழந்தையை தலையில் வைத்தபடியே வந்தபோது அங்கு இருந்த களிமண்ணில் அவருடைய கால் மாட்டி, எங்கள் கண்முன்னே குழந்தை அம்மா, பாட்டி, அத்தை என்று கதறியபடியே மூழ்கியது என சொல்லி கதறி அழுதுள்ளார்.

அத்துடன், தாங்கள் உடைமரத்தில் இருந்த முட்களை பிடித்தபடியே 6 மணி நேரமாக அங்கு கத்திக் கொண்டிருந்தோம். யாருமே உதவிக்கு வரவில்லை என்றும் கண்ணீரோடு சொல்லி இருந்தார். அதைக் கேட்டு அறந்தாங்கி நிஷாவும் கண்கலங்கி அழுதார். 

மற்றும் ஒரு பெண், தந்தை இறந்த சோகத்தில் இனி நான் கல்லூரிக்கு போக மாட்டேன் என்று சொல்ல, இதையறிந்த அறந்தாங்கி நிஷா,  நீ படிக்க வேண்டும் என்பது உன்னுடைய தந்தையின் கனவு, லட்சியம் தானே? நீ அவருடைய ஆசையை நிறைவேற்ற வேண்டும். கண்டிப்பா நீ படிக்க வேண்டும் என்று அட்வைஸ் கொடுத்திருந்தார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement