• May 29 2023

பிரபல நடிகர் திடீர் மரணம்..சோகத்தில் ரசிகர்கள்..!

rip
Aishu / 1 month ago

Advertisement

Listen News!

பிரபல சாண்டல்வுட் நடிகர் தபோரி சத்யா  திடீரென மரணமடைந்துள்ள சம்பவம் ரசிகர்களிடத்தே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது .

46 வயதான தபோரி சத்யா சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். நுரையீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு பெங்களூரு பிஜிஎஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது.


லூஸ் மட யோகேஷ் நடித்த ‘நந்தா லவ்ஸ் நந்திதா’ உட்பட பல படங்களில் நடித்தவர் தபோரி சத்யா.அத்தோடு  இந்த படத்தில் அவர் குவாட்ரூ என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். நடிப்பு மட்டுமின்றி இயக்குவதிலும் ஆர்வம் கொண்டிருந்த சத்யா, ‘மேளா’ என்ற படத்தை இயக்கியிருந்தார்.


இன்னொரு புதிய படத்தை இயக்குவதற்கு சத்யா தயாராகிவந்த நிலையில், அவரது ஆசை நிறைவேறும் முன்னரே எட்டாத உலகத்திற்கு பயணித்து விட்டனர்.அத்தோடு  சத்யாவுக்கு மனைவி மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர்.


தபோரி சத்யாவின் மறைவுக்கு கன்னட திரையுலகம் இரங்கல் தெரிவித்துள்ளது. அத்தோடு சத்யாவின் உடல் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன.ர். 

Advertisement

Advertisement

Advertisement