• Sep 20 2024

பிரபல நடிகர் புற்றுநோயால் மரணம்…அதிர்ச்சியில் திரையுலகம்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

ஹாலிவுட் திரையுலகில் நடிகனாக அறிமுகமாகி 1970-ஆம் ஆண்டு தொடக்கம் 1980-ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரை ஹாலிவுட் சினிமாவை தனது அபார நடிப்புத் திறனினால் கட்டிப் போட்டவர் நடிகர் டேவிட் வானர். ஹாலிவுட் திரையுலகில் உச்சத்தில் திகழ்ந்த டேவிட் வார்னர் ‘The Omen’ என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

அதன் பின்னர் 1978-ஆம் ஆண்டு ‘Holocaust’ என்ற பெயரில் வெளிவந்த குறுந்தொடரில் 'ரெய்ன்ஹார்ட் ஹெய்ட்ரிச்' என்ற நாஜி அதிகாரியாக நடித்திருந்தார். இதற்காக இவர் 'எம்மி' விருதினை பெற்று கொண்டார். மீண்டும் 1985-ஆம் ஆண்டு ‘Hitler’s S.S.: Portrait in Evil’ என்ற டெலிபிக் திரைப்படத்தில் அவர் நாஜி ஹெய்ட்ரிச் கதா பாத்திரத்தில் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து 1997-ஆம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூனின் இயக்கத்தில் வெளிவந்த பிளாக்பஸ்டர் படமான ‘டைட்டானிக்’ திரைப்படத்தில் டேவிட் வார்னர் வில்லனாக நடித்திருந்தமை அனைவராலும் அறியப்பட்ட ஒரு விடயம். இப்படத்தில் இவரது பிரமாண்டமான நடிப்பு பலராலும் பாராட்டப்பட்ட ஒன்றாகும். மேலும் 2001-ஆம் ஆண்டு காலப்பகுதியில் 'Planet of the Apes’, ‘Ladies in Lavender’, ‘Mary Poppins Returns, ‘You, Me and Him’ உள்ளிட்ட பல ஹாலிவுட் திரைப்படங்களில் இவர் நடித்திருந்தார்.

இவ்வாறு ஹாலிவுட் சினிமாவில் பிரபலமாக திகழ்ந்த இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலமானார். அவரின் மறைவை வார்னரின் குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர். மேலும் டேவிட் வார்னர் ஒன்றரை வருடங்கள் உடல் நலம் சரியில்லாமல் இருந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இவரின் பிரிவைத் தாங்க முடியாத உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் மற்றும் சக நடிகர்கள் டேவிட் வார்னரின் மறைவுக்கு சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement