• Jul 27 2024

'எதிர்நீச்சல்' சீரியல் நடிகைக்கு அடித்தது அதிஷ்டம்! 'GOAT' படத்தில் இணைந்ததாக லேட்டஸ்ட் தகவல்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் விஜய் நடிப்பில் இறுதியாக வெளியாகிய லியோ திரைப்படம் கலவையான விமர்சங்ளைப் பெற்றாலும் வசூலில் அள்ளிக் குவித்தது. 

இதனை அடுத்து விஜய் இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தி கோட் என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பும் மிகவும் விறுவிறுப்பாக சென்னையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 


இந்த நிலையில், 'எதிர்நீச்சல்' சீரியல் நடிகை, கனிகா தளபதி விஜய் உடன் இணைந்து 'GOAT' படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் 'ஈஸ்வரி' என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் கனிகா.


இவர் தற்போது, நடிகர் விஜய் நடிக்கும்  'GOAT' படத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. 

அதற்கு காரணம், கனிகா இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் எடுத்து கொண்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படம் தான். ஆனால் இதுகுறித்து தற்போது வரை எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகாத நிலையில், கூடிய சீக்கிரம் இதுகுறித்து கனிகா தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement