• Jul 12 2025

வாகா பார்டரில் உணர்வுபூர்வ அனுபவம்!ராணுவத்தின் வீர வாழ்க்கை கண்டு அதிர்ச்சியடைந்த அதர்வா.!

Roshika / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அதர்வா. இவர் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள்  மத்தியில்  நல்ல வரவேற்பை பெற்று வருகின்றார். சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள வாகா பார்டர் பகுதியில் சென்றுள்ளார். அங்கு அவருக்குக் கிடைத்த அனுபவம், வாழ்க்கை முழுக்க மறக்க முடியாததாக இருந்ததாக உணர்ச்சியுடன் கூறிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. 


அங்கு சென்றபோது, தமிழகத்திலிருந்தும் பலர் அந்த இடத்தில் இருந்தனர். பார்டர் பகுதியில் பாதுகாப்பில் இருந்த பல இந்திய ராணுவ வீரர்களுடன் நேரில் சந்தித்து, அவர்கள் தங்கும் இடங்கள் (bunkers), பாதுகாப்பு நிலைகள், கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் அவர்கள் வாழும் அபாரமான கட்டுப்பாட்டான வாழ்க்கை முறை அனைத்தையும் நேரில்  பார்த்ததாகவும் கூறுயிருந்தார். ஜவான்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்தபோது, அவர்கள் எதிர்கொண்ட போர் விழுப்புகள், கவுண்டர் அடாக் அனுபவங்கள், மற்றும் நாட்டின் பாதுகாப்புக்காக நிழலில் நடத்தும் விடாமுயற்சி போன்றவை அவரை மிகவும் ஃபேசினேட் செய்து இருந்ததாக கூறியிருந்தார். 

அந்த வீரர்கள் கூறிய ஒவ்வொரு கதை, ஒவ்வொரு சிக்கலான நடவடிக்கைகளும் மாஸ் ஸ்கிரீன் சீன்களுக்கே ஒத்தவை போலிருந்தன. “நாங்கள் இப்படி வந்தோம், நாங்கள் இப்படித் தாக்கினோம்” என்று அவர்கள் கூறியபோது, பக்கத்தில் உட்கார்ந்து கேட்டிருப்பவர்களே உறைந்துவிடும் அளவுக்கு அதிர்ச்சியும் ஈரமும் கலந்த உணர்வுகள் ஏற்பட்டதாக அவர் கூறினார்.


இந்த அனுபவம், அவரிடம் ஒரு புதிய ஆசையை உருவாக்கியிருக்கிறது ஒரு இந்திய ராணுவ வீரர்களை மையமாகக் கொண்ட படம் இயக்கவேண்டும் என்ற கனவு! அந்த ஆசை தீவிரமாக உள்ளதாகவும் கூறிய இருந்தார்.மேலும்  இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலர் “இந்த மாதிரியான உண்மையான அனுபவங்களிலிருந்து எழும் கதைகள்தான் உண்மையான தேசபக்தியை ஊட்டி விடும்” என தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றார். 


Advertisement

Advertisement