• Sep 20 2024

உருவத்தை கேலி செய்தால் கவலைப்படாதே- தனக்குத் தானே அட்வைஸ்ட் பண்ணின நடிகர் தனுஷ்-ஓ இது தான் ட்ரெண்டிங்கா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் என்றும் தவிர்க்க முடியாத நடிகர்களில் முக்கியமானவராக வலம் வருபவர் தான் தனுஷ்.சிறந்த கதாப்பாத்திங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர் இதுவரை ஏகப்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கின்றார் என்பதும் முக்கியமாகும்.

தமிழைத் தவிர தெலுங்கு ,ஹிந்தி, ஆங்கிலம் என பல மொழிகளில் நடித்து வரும் இவரது நடிப்பில் தற்பொழுது நானே வருவேன், திருச்சிற்றம்பம் ,வாத்தி ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகின்றது. இவை விரைவில் ரிலீஸ் ஆகவும் காத்திருக்கின்றது.

இவரது நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முதல் வெளியாகிய ஹாலிவுட் திரைப்படம் The Gray Man பெரிய எதிர்பார்பிற்கிடையே வெளியாகியுள்ள இப்படத்தில் தனுஷின் கதாபாத்திரம் அனைவரிடமும் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

The Gray Man படத்தின் ப்ரோமோஷனுக்காக நடிகர் தனுஷ் பல இடங்களுக்கு சென்று பேட்டியளித்திருந்தார். அப்படி அவர் அளித்த ஒன்று வைரலாகி வருகின்றது.

அதில் தனுஷ் இளம் தனுஷிற்கு என்ன அட்வைஸ் கொடுப்பீர்கள் என கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு தனுஷ் “உன் உருவத்தைப் பார்த்து யாராவது கேலி செய்தால் அதனை பெரிதாக எடுத்துக்கொண்டு கவலைபட வேண்டாம், ஒரு நாள் உன்னை ஒரு ஹாலிவுட் ஹீரோ Sexy Tamil Friend என்று அழைப்பார்” என பதிலளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement