• May 15 2025

"டிடி நெக்ஸ்ட் லெவல்" தடை செய்து விடாதீர்கள்...! காலில் விழுந்த கூல் சுரேஷ் ..!

Roshika / 7 hours ago

Advertisement

Listen News!

எஸ்.பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவான படம் "டிடி நெக்ஸ்ட் லெவல்" தற்போது மே 16 திகதி திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில் இந்த திரைப்படதில் இடம் பெற்றுள்ள "கோவிந்தா கோவிந்தா"என்ற பாடலுக்கு  நீதி மன்றத்தில் வழக்கு நடை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. அந்த வகையில் நடிகர் கூல் சுரேஷ் மேடை நிகழ்வொன்றில் நடந்து கொண்ட விதம் ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.


தி ஷோ பீப்பிள் மற்றும் நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் தயாரித்தள்ள இந்த திரைப்படத்தில் சந்தானம் ஹீரோவாகவும் கீதிகா திவாரி    செல்வராகவன் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் எனப் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.


தற்போது இந்த படத்தில் இடம் பெற்ற பாடலில் பெருமாளை தவறாக பாடியுள்ளதாக நீதி மன்றத்தில் வழக்கு நடை பெற்று வருகின்றது. மேடை நிகழ்வில்  கூல் சுரேஷ் செய்த காரியத்தால் ரசிகர்கள் அதிர்ச்சியாகி  உள்ளார்கள். அதாவது மேடையில் பேசும் போது நடிகர் சந்தானம் ஒரு "ஆன்மிக வாதி,அவர் பெருமாளை  தவறாக காண்பிக்க மாட்டார் அந்த படத்தை தடை செய்து விடாதீர்கள் என்று கூறியுள்ளார்.


மேலும் "டிடி நெக்ஸ்ட் லெவல்" படத்தினை  பவன் கல்யாண்னின்  ஜனசேனா கட்சியினரே அந்த படத்தினை பாருங்க அவர் ஏன் அந்த காட்சியினை வைத்தார் என்று புரியும் என்றும் தவறு இருந்தால் மன்னிப்பு கேட்ப்பதாகவும் கூறி காலில் விழுந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பக்கங்களில்  பதிவிட்டு வருகின்றனர்

Advertisement

Advertisement