• May 20 2024

முத்து பட நடிகை விசித்திராவுக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கின்றாரா?- ஹுரோ போல அழகாக இருக்கின்றாரே

stella / 1 year ago

Advertisement

Listen News!


90களில் தமிழ் சினிமாவில் கலக்கிய விசித்திராவின் மகனது புகைப்படம் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் அதனை வைரலாக்கி வருவதைக் காணலாம்.

அதாவது தமிழ் சினிமாவில் குணச்சித்திரவேடங்களிலும் காமெடி வேடங்களிலும் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் நடிகை விசித்ரா.தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்திருக்கின்றார்.


கடந்த  1991ம் ஆண்டு போர்க் கொடு என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார். இதனைத் தொடர்ந்து தலைவாசல், வீரா, அமராவதி, ராசி ,கிங் ,பூந்தோட்டம் ,முத்து ,ஜெயம் எனப் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

இது தவிர  மாமி சின்ன மானி, வாழ்க்கை, ராசாத்தி, ஆனந்தி, கல்யாணி மலையாளம், கீதா கோவிந்தம் தெலுங்கு போன்ற தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார்.திருமணமாகி பூனேவில் செட்டில் ஆன விசித்ரா இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டீவாக இருப்பார். 

அந்த வகையில் அண்மையில் தனது மகனுக்காக அவர் ஹெல்மெட் வாங்கும் போது எடுத்த வீடியோவை தனது இன்ஸ்டாவிலும் பகிர்ந்துள்ளார்.அந்த வீடியோ பார்த்த ரசிகர்கள் அட நடிகை விசித்ராவின் மகனா இவர் என அதிக லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

மேலும் இவர் 2001 இல் ஷாஜி என்பவரை  திருமணம் செய்ததோடு மொத்தமாக மூன்று ஆண்பிள்ளைகள் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement